பக்கம்:பூர்ண சந்திரோதயம்-2.pdf/139

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


வடுவூர் கே. துரைசாமி ஐயங்கார் 135 அவரால் மறைத்து வைக்கப்பட்டிருந்த முத்திரை மோதிரத்தை எடுத்து லாந்தர்வெளிச்சத்தில் காட்டிஅதில் செதுக்கப்பட்டிருந்த எழுத்துக்களைப் படிக்கும்படி தமது மனைவியிடம் சொல்ல, அவள் நிரம்பவும் லஜ்ஜையும் கலக்கமும் கொண்டவளாய்த் தயங்கித் தயங்கி அதைப் பார்த்து பவானியம் பாள்புரம் ஜெமீந்தார் ராமலிங்கப் பிள்ளை என்று படித்தாள். அதைக் கேட்ட அவளது புருஷர், 'ஆகா! எனக்கு நீ எப்படிப்பட்ட பெருமை சம்பாதித்துக் கொடுத்திருக்கிறாய்! எல்லாருடைய வீட்டிலும், கள்ளனும், குறவனும், பள்ளனும், பறையனும் திருட வந்தால், நம்முடைய வீட்டில் எப்படிப் பட்ட உன்னத ஸ்திதியிலிருக்கும் ஜெமீந்தார் திருட வந்தார் பார்த்தாயா? இவருக்கு இருக்கும் திரவியம் இந்த ஊரிலுள்ள மருங்காபுரி ஜெமீந்தாருடைய செல்வத்துக்குச் சமதையாகச் சொல்லலாம். அப்படிப்பட்டவரே நம்முடைய வீட்டில் திருடவந்தால், இவரைவிட நாம் அதிக பணக்காரன் என்று அர்த்தமாகிறது அல்லவா? இப்படிப்பட்ட மேன்மையை எனக்குச் சம்பாதித்துக் கொடுத்தவளான உன்னை நான் மகா உபகாரியாக மதிக்கிறேன். ஆனால், உண்மையில் பார்த்தால் நம்மிடத்தில் இப்போது செலவுக்கு ஒரு காசுகூட இல்லை. பணக்காரன் என்று எனக்கு வெறும் பெயர் மாத்திரம் தேடிக்கொடுத்த நீ உண்மையில் பெருத்த பணத்தொகையையும் சம்பாதித்துக் கொடுப்பாயானால், அப்போதுதான் நீ நிஜமான உபகாரி என்று சொல்லத் தகுந்தவளாவாய். ஆனால், இதில் எனக்கு ஒரு சங்கதிதான் ஆச்சரியத்தை உண்டாக்குகிறது. நான்தான் வயதான கிழவனென்று என்னை வெறுத்து ஒர் ஆசை நாயகனைப் பிடித்துக் கொண்டாயே! இவனாவது குமரனாக இருக்கக் கூடாதா? இவனும் என்னைப் போல வயதான கிழவன்தானே இவனுடைய பிள்ளைக்கே வயது இருபது இருபத்திரண்டு இருக்குமே! ஒருவேளை இவனுடைய பணத்துக்காக ஆசைப்பட்டு இவனைப் பிடித்துக்கொண்டாயா?