பக்கம்:பூர்ண சந்திரோதயம்-2.pdf/140

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


136 பூர்ணசந்திரோதயம்-2 அப்படித்தான் ஒரு லக்ஷம், இரண்டு லக்ஷம் பெறத்தக்க பொருள் சம்பாதித்தாயா? எங்கே? நீ பணம் வைத்திருக்கிற இடத்தைக் காட்டு; நான் கொஞ்சம் எடுத்துக்கொள்ளுகிறேன்; வா போகலாம்; நேரமாகிறது. எனக்கு அவசரமான செலவுகளுக்குப் பணம் வேண்டியிருக்கிறது” என்று குத்தலாக வும் பழிப்பாகவும் பேசி, அவளது கையை இறுகப் பிடித்து கோபத்தோடு அவளை இழுத்துக் கொண்டு உப்பரிகையை விட்டுக் கீழே இறங்கினார். 18-வது அதிகாரம் போலீஸ் எத்தன் மறுநாளாகிய சனிக்கிழமையன்று காலை பத்துமணி சமயமாயிற்று. அந்த நகரத்தின் ரகசியப் போலீஸ் இன்ஸ் பெக்டர் வடக்கு ராஜவீதியிலிருந்த மருங்காபுரி ஜெந்ேதாரது மாளிகையின் வாசலிற்கு வந்து வெளிக்கதவை இடிக்க, வாசற் காவற்காரன் வந்து கதவைத் திறந்து யாரென்று கேட்டு அவரால் கொடுக்கப்பட்ட ஒருதுண்டுச்சீட்டை எடுத்துக் கொண்டு வெல்வெட்டு மாடத்திற்குச் சென்றான். முதல் நாள் இரவில் பூர்ணசந்திரோதயத்தால், விசை வைத்த நாற்காலியில் தள்ளிவிடப்பட்ட கிழவர் எப்போது எப்படித் தம்மை விடுவித்துக்கொண்டார் என்பதைக் கவனிப்போம். அவரால் குறிக்கப்பட்ட ரோஜா புஷ்பத்தை அவள் தொட்ட மாத்திரத்தில் ரகசியமான ஒரு கண்ணாடிக் கதவு திறந்து கொண்டதும், அந்தத் திறப்பின் வழியாக அவள் சென்று படிக்கட்டின் வழியாகக் கீழே இறங்கியதும் தெரிந்த விஷயங்கள். கிழவரது காரியதரிசியான கோவிந்தசாமியை மேலே அனுப்பிவிட்டுப் போவதாக அவள் அவருக்கு வாக்கு