பக்கம்:பூர்ண சந்திரோதயம்-2.pdf/143

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


வடுவூர் கே. துரைசாமி ஐயங்கார் 139 அவர் பல் லைக் கடித்துக் கொண்டு மேலும் ஒரு நாழிகை நேரம் பொறுத்துப் பார்த்தார். அப்போதும் அவன் வந்தபாடில்லை. அவள் தம்மை அந்த நிலைமையிலேயே இருக்க வைத்துவிட்டுப் போய்விட்டாள் என்பது சந்தேகமறத் தெரிந்தது. என்ன செய்வார். அவர் தளர்ந்து மெலிந்துபோன சரீரமும் உடையவர். ஆதலால், அந்த நாற்காலியில் கட்டப்பட்டிருந்தது அவரால் சகிக்க இயலாத நரக வேதனை யாக இருந்தது. அதே நிலைமையில் தாம் அன்றிரவு முழுவதும் இருப்பது முற்றிலும் அசாத்தியமான காரியம் என்ற நினைவும் அந்த இரவு கழியும் முன் தமது உயிரே போய் விடும் என்ற அச்சமும் தோன்றி வதைக்கலாயின; தேகபாதையும், மனோ பாதையும் ஒன்று கூடி ஒரே காலத்தில் அவரைத் துன்புறுத்தின ஆகையால், அவர் நெருப்புத்தணலில் வீழ்ந்த புழுவைப் போல பரமசங்கடமான நிலைமையிலிருந்து உயிரிழிந்து கிடந்தார். அவ்வாறு சில நாழிகை நேரம் கழிந்தது. அவரது நிலைமை வாயால் விவரித்துச் சொல்ல அசாத்தியமானதாக இருந்தது. அவரது கண்கள் இருண்டன. மயக்கத்தினால் அறிவு பிறழ்ந்தது. அதற்குமேல் எவரும் வந்து தம்மை விடுவிக்க வரமாட்டார்கள் என்ற எண்ணமும் உண்டாகவே அவருக்கு ஒரு யோசனை தோன்றியது. தாம் வெட்கமுற்று அவ்வாறு மெளனமாக இருப்பதைவிட, தாம் கோவிந்தசாமியை அழைத்துக் கூக்குரலிட்டுப் பார்க்க வேண்டும் என்ற ஒரு யோசனை தோன்றியது. ஆகவே அவர் முதலில் தணிவாகவும் பிறகு உரமாகவும் கூச்சலிட்டு கோவிந்தசாமியையும் மற்ற வேலைக்காரர்களையும் கூப்பிட்டுக் கூப்பிட்டுப் பார்த்தார். எவரும் வரவுமில்லை; மறுமொழி கொடுக்கவும் இல்லை. அவர் மேலும் அரைநாழிகை வரையில் தம்மால் இயன்ற வரையில் கூக்குரலிட்டுக் கூவிப் பார்த்தார். அதனால் எவ்விதப் பலனும் உண்டாகவில்லை. ஆகையால், அவர் அலுத்து நம்பிக்கையற்று அயர்ந்து அப்படியே ஒய்ந்து போய் விட்டார். தாம் எவரையாவது கொண்டுவந்து நாற்காலியில்