பக்கம்:பூர்ண சந்திரோதயம்-2.pdf/145

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


வடுவூர் கே. துரைசாமி ஐயங்கார் 141 பேசி முதல் நாள் இரவில் பூர்ணசந்திரோதயம் அவனைக் கண்டு அவனிடத்தில் சொல்லிவிட்டுப் போன பொய்யான செய்தியை உணர்ந்து மிகுந்த அவமானமும் ஏக்கமும் கொண்டவராய்ச் சிறிது நேரமிருந்து, தமது காலை உணவை முடித்துக் கொண்டு ரதி கேளி விலாசத்தை விட்டு முன்னால் இருந்த வெல்வெட்டு மாடத்திற்கு வந்து தமது ஆசனத்தில் அமர்ந்து சோர்வாகவும் விசனமாகவும் உட்கார்ந்து கொண்டிருந்தார். அப்போது அவரது மனம் காதலைப்பற்றிய எண்ணங்களையாவது கொள்ளாமல் முற்றிலும் ஏமாற்றம் அடைந்து செயலற்று இருந்தது. அந்தச் சமயத்தில் வேலைக்காரன் ஒருவன் உள்ளே வந்து அவரை வணங்கி, இந்த அதிகாரத் தொடக்கத்தில் விவரிக்கப்பட்டபடி ரகசியப் போலீஸ் இன்ஸ் பெக்டர் கொடுத்து அனுப்பிய துண்டுச்சீட்டைக் கொணர்ந்து கொடுக்க, அதை வாங்கிப் படித்து உணர்ந்த ஜெமீந்தார், உடனே அந்த இன்ஸ்பெக்டரை உள்ளே அனுப்பும் படி உத்தரவு செய்து வேலைக்காரனை அனுப்பினார். சோர்ந்து தளர்ந்து கிடந்த அவரது மனம் ஒருவித உற்சாகத்தையும் ஊக்கத்தையும் அடைந்தது. அவர் ஏதாகிலும் புதுமையான செய்தி கொண்டு வந்திருக்க வேண்டும் என்ற ஆவலும் மகிழ்ச்சியும் கொண்டவராய் உட்கார்ந்திருந்தார். அடுத்த நிமிஷத்தில் போலீஸ் இன்ஸ்பெக்டர் அவரிடம் வந்து கும்பிடுபோட, ஜெமீந்தார் புன்னகை செய்து அவரை உபசரித்து ஆசனம் கொடுத்து உட்காரச் செய்து, 'என்ன இன்ஸ்பெக்டர் ஐயா? அந்தப் பார்சீஜாதிப் பெண்ணைப் பற்றியாவது, எங்களை வழிமடக்கி அழைத்துக்கொண்டு போனவர்களைப் பற்றியாவது ஏதாகிலும் சங்கதி தெரிந்ததா?” என்றார். இன்ஸ்பெக்டர், "ஓ! எல்லாச் சங்கதியும் நன்றாகத் தெரிந்து போய்விட்டது. அதைத் தெரிந்துகொள்ளாமல் நான் தூங்குவேனா அல்லது நல்ல சங்கதியொன்றையும் தெரிந்து