பக்கம்:பூர்ண சந்திரோதயம்-2.pdf/147

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வடுவூர் கே. துரைசாமி ஐயங்கார் 143 ந்ான் மறுபடியும் இளவரசரைப் பார்க்கும்போது உம்மைப் பற்றித் தக்கபடி சிபாரிசு செய்து உமக்கு ஏதாவது பெரிய உத்தியோகம் கொடுக்கும்படி செய்கிறேன். விவரங்களைக் கேட்கவேண்டும் என்று எனக்கு நிரம்பவும் ஆவலாக இருப்பதால், நீர் அதிகமாக வளர்த்தாமல் சுருக்கமாகச் சங்கதியைச் சொல்லும்' என்றார். உடனே இன்ஸ்பெக்டர், "ஓ! அப்படியே சொல்லுகிறேன். புதன்கிழமை முழுதும் நான் பிச்சைக்காரனைப் போல வேஷம் போட்டுக் கொண்டு ரஸ்தாவில் உட்கார்ந்திருந்தது பிரயோசனப்படாமல் போன சமயத்தில், தங்களுடைய வேலைக்காரனால் அழைக்கப்பட்டு நான் தங்களிடம் வந்து, பேசிக்கொண்டிருந்துவிட்டு வெளியில் போனேன் அல்லவா. அதன்பிறகு எனக்கு அன்றைய இரவு முழுதும் தூக்கமே வரவில்லை. என் மனம் முழுதும் அதே விஷயத்தில் லயித்துப் போயிருந்ததன்றி, அன்றைய பகல் முழுதும் தாங்களும் நானும் அவ்வளவு தூரம் விழிப்பாக இருந்தும் நமக்குத் தெரியாமல் கண்கட்டு வித்தையில் நடப்பதுபோல, தினசரி டைரிப் புத்தகம் பூத்தொட்டிக்குள் வந்து சேர்ந்ததை நினைக்க நினைக்க, என்னுடைய ஆச்சரியம் சொல் லிமுடியாது. தங்களுடைய அந்தரங்க வேலைக்காரனான கோவிந்தசாமி யும், அன்றைய தினம் தங்களுடைய ஜாகைக்கு வந்து விட்டுப் போன மூன்று மனிதர்களும் இந்த விஷயத்தில் கொஞ்சமும் சம்பந்தப்படக் கூடியவர்கள் அல்ல என்பது என் மனசில் நிச்சய மாகப்பட்டது. ஆகையால், என்னுடைய மூளை குழம்பிப் போய் விட்டது. அறிவு கலங்கிப் போய்விட்டது. பொழுது விடிகிறவரையில் நான் என்னுடைய அறிவை உபயோகப்படுத்தி பலவித யூகங்களும், ஆட்சேபனை சமாதானங்களும் செய்து கொண்டிருந்து மறுநாட் காலையில் ஒருவித முடிவிற்கு வந்தேன். புதன்கிழமையன்று தினசரி டைரியை ரகசியமாகக் கொண்டுவந்து தங்களிடம் go.g.si-10