பக்கம்:பூர்ண சந்திரோதயம்-2.pdf/151

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


வடுவூர் கே. துரைசாமி ஐயங்கார் - 147 போல நடித்துப் பிரமாதமாகக் களைத்துப் போனவன் போலப் பாசாங்குபண்ணி அடிக்கடி திண்ணைகளின் மேல் உட்கார்ந்து உட்கார்ந்து எழுந்து போனேன். அந்த ஊரிலுள்ள குழந்தைகளும் பெண்பிள்ளைகள் பலரும் வந்து சூழ்ந்துகொண்டு பழைய இரும்பு பித்தளைகளைக் கொடுத்து, பேரீச்சம்பழம் வாங்கிக் கொண்டு போயினர். அப்படி வந்தவர்களுள் பத்து வயதுப் பையன் ஒருவன் இருந்தான். அவன் ஏழைப் பையன் போலக் காணப்பட்டான். அவனுக்குப் பழைய இரும்பு பித்தளை சாமான்கள் ஒன்றும் கிடைக்கவில்லை. ஆனால், பேரீச்சம் பழத்தில் அவனுக்கு இருந்த ஆசையினால் அவன் என்னை விட்டுப் போக மாட்டாமல் என்னோடு கூடவே தொடர்ந்து வந்தான். மற்றவர்கள் எல்லோரும் பேரீச்சம்பழம் வாங்கிக் கொண்டு போய்விட்டார்கள். அந்தப் பையன்மாத்திரம் ஏங்கிய பார்வையாகப் பார்த்துக்கொண்டு என்னோடு கூடவே வந்து, நான் உட்கார்ந்த இடத்துக்குப் பக்கத்திலெல்லாம் நின்று கொண்டே இருந்தான். அந்தத் தெருவிலிருந்த வீடுகள் எல்லாவற்றிலும் அன்னத்தம் மாளுடைய வீடே பெரிய அரண்மனைபோல இருந்த மெத்தைவீடு. அந்த வீட்டுக்கு எதிரில் இருந்த வீட்டுக்குப் போன நான், நிரம் பவும் களைத்துப் போனவன் போலப் பாசாங்கு பண்ணி அங்கேயே கொஞ்சநேரம் உட்கார்ந்து கொண்டேன். எனக்கெதிரில் அந்தப் பையனும் நின்று கொண்டிருந்தான். அவனுக்குக் கொஞ்சம் பேரீச்சம் பழம் கொடுத்து எனக்கு வேண்டிய சங்கதிகளை யெல்லாம் அவனிடத்திலிருந்து கிரகித்துக் கொள்ளலாம் என்ற யோசனை என் மனதில் உண்டாயிற்று. பழத்தை அதிகமாகக் கொடுத்தால், அவன் அதை வாங்கிக்கொண்டு போனாலும் போப் விடுவான் என்று நினைத்துக் கொஞ்சமாக முதலில் கொடுத்து அவனுடைய ஆசையை அதிகப்படுத்தி, அதன்பிறகு அவனை வசப்படுத்த எண்ணி அவனைப் பார்த்து அன்பாகப் பேசத் தொடங்கி, 'ஆரப்பா நீ! அப்ப மொதக் கொண்டு நீ என்னோட கூடவே வாரியே. ஒங்க