பக்கம்:பூர்ண சந்திரோதயம்-2.pdf/152

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


148 - பூர்ணசந்திரோதயம்-2 ஊட்டுல, இரும்பு. பித்த ளெ ஒண்ணும் இல்லையா? என்றேன். அவன் ஒன்றுமில்லை என்று விசனத் தோடு மறுமொழி கூறினான். நான் உடனே, “எது ஒங்க ஊடு என்றேன். அவன் தங்களுடைய வீடு பக்கத்துத் தெருவில் இருக்கிறது என்று சொன்னான். "அப்படியானா நீ அடுத்த தெருவுல இருந்தா என்னோட வாறே? ஒன்னெப் பார்த்தா நல்ல பையனாட்டம் தோணுது. போனாப் போவுது. ஒனக்கு நான் சொம் மாக் கொஞ்சம் பேரீச்சம் பழந் தாரேன். தின்னுப்புட்டு போ; தம்பி?” என்று நிரம்பவும் பிரியமாகப் பேசியபடி இரண்டு சிறிய சுளைகளை எடுத்து அவனிடத்தில் நீட்டினேன். எதிர்பாராத அந்த வெகுமதியை மிகவும் சந்தோஷமாக வாங்கிக்கொண்ட அந்தப் பையன் ஆவலோடு அதை வாயில் போட்டு மென்று தின்றான். அவன் அந்த இன்பத்தை அநுபவித்துக் கொண்டிருந்த சமயத்தில் நான் அவனை, அடேய் பையா இதோ பக்கத்துலே பெரிய ஊடு இருக்குதே, அது யாரோடே வீடு தெரியுமா ஒனக்கு?' என்று லோகாபிராமமாகக் கேட்டேன். நான் அவனுக்கு அன்போடு பழம் கொடுத்ததைப் பற்றி, என்னிடத்தில் மிகுந்த நன்றியறிதல் சுரந்தவனாகக் காணப்பட்ட அந்தப் பையன், எனக்கு வேண்டிய எந்த உதவியையும் செய்யத் தயாராக இருப்பதைத் தோற்றுவித்து, மிகவும் துடியாக எனக்குப் பதில் சொல்லத் தொடங்கி, “அந்த வீடு அன்னத்தம்மாளோடெ வீடு. அவுங்க ரொம்ப பணக்காரரு. அவுங்க வீட்டுக்குத் தஞ்சாவூரு ராசா கீசாவெல்லாம் வாரது வளமையிங்க, அவுங்க பேரீச்சம்பழம் எப்பவும் வாங்கறதில்லே' என்று ஒன்றுக்கு நான்காக பதில் சொல்லி, நான்கேட்ட கேள்வியை என்னுடைய தொழிலுக்குச் சம்பந்தப்படுத்திப் பேசினான். அதை வைத்துக்கொண்டு நான், 'சரி; அவுங்க வாங்குவாங்களா! மாட்டாங்கதான். அவுங்க வீட்டுலே வேலை செய்யற ஆளுங்க யாராச்சும் இருப்பாங்களே, அவுங்ககூட வாங்கமாட்டாங்களா?' என்றேன். உடனே அந்தப் பையன்'ஒlஅவுங்க வாங்குவாங்க. ஆனாஅவுங்க இந்த ஊட்டு