பக்கம்:பூர்ண சந்திரோதயம்-2.pdf/153

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


வடுவூர் கே. துரைசாமி ஐயங்கார் 149 வேலையெல்லாம் முடிச்சுப் புட்டு அவங்களொட சொந்த ஊட்டுக்குப் போயிருப்பாங்க இங்கிட்டு இருக்க மாட்டாங்க. அதனாலெதான், அவுங்க பேரீச்சம்பளம் வாங்கல்லே என்றான். நான் உடனே அவனைப் பார்த்து , 'இந்தப் பெரிய ஆட்டுலே வேலைக்காரரு ஒரு சுமாரு பத்துப் பேரு இருப்பாங்களா?' என்றேன். அந்தப் பையன், 'இல் லே இல்லே. பொம்புள்ள ரெண்டுபேரு இருக்கறாளுவ. ஒருத்தி சமயக்காரி, ஒருத்தி வேலைக்காரி. ஆம்புள்ள ஒருத்தன்தான் இருக்கான். அவனோட பேரு கந்தசாமி வாண்டையானுன்னு சொல்லுவாங்க. அவனோட ஊடு பள்ளித் தெருவிலே இருக்குது” என்றான். நான் உடனே அவனைப் பார்த்து, ஆனா சரி; நானும் வாண்டையாச் சாதியாந்தான். எனக்கு ரொம்ப பசிக்குது. அவுங்க ஆட்டுக்குப் போயிக் கொஞ்சம் சோறுபோடச் சொல் லித் தின்னாத்தான் இனிமேலே நடக்கமுடியும். நீ என்னோட கூடவே வந்து அந்த ஊட்டெக் காட்டினா ஒனக்கு இன்னும் கொஞ்சம் பேரீச்சம்பழம் தர்றேன், காட்டுறியா?" என்றேன். பையன், "ஓ! காட்டறேன். வா போவலாம்” என்று துடியாக பதில் சொன்னான். உடனே நான் என்னுடைய பேரீச்சம்பழத் தட்டைத் துக்கித் தலையில் வைத்துக்கொண்டு மெல்ல மெல்ல நடந்து அந்தத் தெருவை விட்டுப் பக்கத்தில் இருந்த பள்ளித் தெருவுக்குப் போனேன். அது பதினைந்து இருபது குச்சு வீடுகள் உள்ள சிறிய தெரு. அந்தப் பையன் தூரத்தில் இருந்தபடி கந்தசாமி வாண்டையானுடைய வீட்டைக் காட்டினான். அவனுக்கு மறுபடியும் நான் கை நிறையப் பேரீச்சம்பழம் கொடுத்துப் போகும்படி அனுப்பி விட்டு அவனால் அடையாளம் காட்டப்பட்ட வீட்டுக்குப் போப், உஸ் அப்பாடா' என்று சொல்லிக் கொண்டு திண்ணையின்மேல் உட்கார்ந்து கொண்டு 'ஓட்டை ஒடசல் செம்பு பித்தளைக்குப் பேரிச்சம்பழம்' என்று ஒரு பெரிய கூச்சல் போட்டேன். முந்திய தெருவில் ஜனங்கள் வந்தது போல அவ்விடத்திலும் ஏராளமானவர்கள் வந்து பழைய இரும்பு