பக்கம்:பூர்ண சந்திரோதயம்-2.pdf/158

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


152 பூர்ணசந்திரோதயம்-2 வைத்திருந்த பணத்தை எடுத்துச் செலவு செய்து அவனுடைய மனம் திருப்தி அடையும் வரையில் அவனுக்கு விருந்து நடப்பித்தேன். நானும் குடிக்க வேண்டும் என்று அவன் என்னை அடிக்கடி வற்புறுத்தினதைக் கண்டு நான் பாத்திரத்தை வாயில் வைத்து வைத்துக் குடிப்பதாகப் பாசாங்கு பண்ணி, அதே சமயத்தில் அவனுடைய கவனத்தை வேறே விஷயங்களில் திருப்பி விட்டேன். நான் உண்மையில் குடிப்பதாகவே அவன் எண்ணிக் கொண்டான். அன்றையதினம் சாயுங்காலம் வரையில் நானும் அவனும் அவ்விடத்திலேயே இருந்துவிட்டு அதன்பிறகு அவ்விடத்தை விட்டு வெளிப்பட்டோம். தான் தன்னுடைய எஜமானியம்மாளுடைய வீட்டுக்குப்போய் சாயுங்கால வேளையில் செய்யவேண்டிய அலுவல்களைச் செய்துவிட்டு வருவதாகச் சொல்லிவிட்டு, அவன் என்னை அன்னத்தம்மாள் வீட்டு வாசல் திண்ணையில் உட்கார வைத்துவிட்டு உள்ளே போய் அரைநாழிகையில் தன்னுடைய வேலைகளை எல்லாம் முடித்துக் கொண்டு வெளியில் வந்தான். அதன் பிறகு நானும் அவனும் பக்கத்தில் இருந்த ஆற்றங்கரைக்குப் போனோம். ஆற்றின் ஒரு பக்கத்தில் ஆழமான ஜலம் போய்க் கொண்டிருந்தது. கொஞ்ச பாகத்தில் நல்ல மணல் அழகாகப் பரவி இருந்தது. நாங்கள் இருவரும் போய் மணல் பரப்பில் படுத்து வெகுநேரம் வரையில் பேசிக் கொண்டிருந்தோம். அவன்தன்னுடைய ரகசியங்களை எல்லாம் ஒன்று விடாமல் தாராளமாக வெளியிட்டுக்கொண்டு வந்தான். நான் அவனைப் பார்த்து, “ஏன் அண்ணே ஒனக்கு இந்த அன்னத்தம்மா ஊட்டுல்ெ சம்பளம் எம்பிட்டு?" என்றேன். கந்தன், "அவ நல்ல பணக்காரிதான். ராசாமவன் கிட்டவும், மத்த பெரிய மனிசரு கிட்டவும் ஆயிரம் ஆயிரமாகக் கொள்ளையடிக்கிறா. ஆனா, மத்தவங்களுக்குக் குடுக்க மாத்தரம் அவளுக்கு மனம் வராது. அவ சுத்ததரித்திரம் புடிச்சவ. எனக்கு பேருக்கு மாசம் நாலு கலநெல்லு குடுக்கிறா. அதுக்காகவா நானு வேலை செய்யறேன். நான் இவ்வூட்டுலே