பக்கம்:பூர்ண சந்திரோதயம்-2.pdf/159

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


வடுவூர் கே. துரைசாமி ஐயங்கார் 153 வேலைக்கி அமர்ந்து கொண்டு ரெண்டு மாத காலமாவுது. ஒரு காரியத்தெ மனசுலெவச்சிக்கிட்டு நான் இங்கிட்டு இருக்கறேன். இல்லாமப்போனா இவ குடுக்கற சம்பளத்துல எங்க ஊட்டுச் செலவெல்லாம் ஆயிப்பூடுமா?’ என்றான். நான், 'மாஷத்துக்கு நாலு கல நெல்லு எப்பிடிப் பத்தும்? பத்தாதுதான். இருந்தாலும் நாம் ப இப்பிடிப்பட்டவங்களை அண்டித்தான் வயறு வளக்கணும். பணக்காரரு மனசாறக் குடுக்க மாட்டாங்கதான். அவுங்களாக் குடுக்கறது கொஞ்சமாத்தான் இருக்கும். அவுங்களுக்குத் தெரியாம நாம் பலவிதமாக அவுங்களொட சொத்தைக் கொள்ளையடிக்க வேண்டியது தான். பின்னே என்னதான் செய்யறது? அது இருக்கட்டும். எனக்கு இந்தப் பேரிச்சம்பள வியாபாரம் சுத்தமாகக் கட்டி வரல்லே. எனக்கு இந்த மாதிரி ஒரு ஊடு பாத்து வேலையிலே அமித்திப் புடு அண்ணே ஒனக்குப் புண்ணியமுண்டு. எங்க ஆட்டுலே புள்ளெ குட்டிங்கள்ளாம் பட்டினி கெடந்து சாவுதுங்க. இந்த மாதிரி ஊடு அம் பிடாமெப் போனாலும், வேறே எப்பிடிப்பட்ட தொழிலைக் காட்டினாலும், அது எனக்கு இஷ்டந்தான். நீ கொள்ளையடிக்கச் சொன்னாலும் எனக்குச் சம்மதிதான்' என்றேன். அதைக் கேட்ட கந்தன் நிரம் பவும் அன்பாகவும் ரகசியமாகவும் பேசத் தொடங்கி, 'கவலைப்படாதே அண்ணே கள்ளப்பிள்ளையாப் பொறந்த நீ சாப்பாட்டுக்கு இல்லாம கஷ்டப்பட்றேங்கலாமா? நீ சொல்றதைக் கேட்க எனக்கு லெச்சையா இருக்குதுண்ணே உனக்கு இந்தப் பேரிச்சம்பள வியாபாரமும் வாணாம், ஒண்ணும் வாணாம். நீ நான் சொல்ற வேலையெச் செய்யறதாயிருந்தா ஒன்றோட பங்குக்கு மாத்தரம் மாசம் ஆயிரம் ஐநூறு வந்துடும்; ராசாகணக்கா இருக்கலாம்' என்றான். அதைக் கேட்ட நான் நிரம்பவும் சந்தோஷமடைந்தவன் போலப் பாசாங்கு செய்து, 'சரி அண்ணே! அடேயப்பா அந்த மாதிரியான பெரிய அதிர்ஷ்டம் எனக்கு வரப்போவுதா? அந்த வளியெ நீ எனக்குக் காட்டிக் குடுத்தீன்னா, நான் ஒன்ன ஆண்டவனாட்டம் வச்சு