பக்கம்:பூர்ண சந்திரோதயம்-2.pdf/16

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


12 பூர்ணசந்திரோதயம்-2 கொள்வார்கள்; பழையமாதிரி அவர்கள் சமயங்களில் அவ்வளவு பிரியமாக உதவி செய்யமாட்டார்கள் என்று அந்த மந்திரி சொல்ல வருவான். வாக்குவாதத்தில் அவனை வெல்ல யாராலும் முடியாது. இருந்தாலும் பரவாயில்லை. நான் எப்படியாவது பிரயாசைப்பட்டு நாளைக்குள் இந்தப் பட்டத்தை உங்களுக்குக் கொடுத்ததாகச் சொன்னது பிறப்பிக்கும் படி ஏற்பாடு செய்கிறேன். நான் உங்களுக்கு இவ்வளவு பெரிய காரியம் செய்கிறேனே. அதற்காக நீங்கள் எனக்கு என்ன தரப் போகிறீர்கள்?' என்று புன்னகையாகவும் மகிழ்ச்சியாகவும் வினவினார். . அதைக்கேட்ட மருங்காபுரி கிழவர் மிகுந்த குதூகலமும் ஆனந்தமும் அடைந்தவராய், "சரி; மகாராஜா இந்தக் காரியத்தை மாத்திரம் முடித்துக்கொடுத்தால், மகாராஜா எப்படிப்பட்ட உதவியைக் கேட்டாலும் நான் உடனே செய்து விட்டு மறுவேலை பார்க்கிறேன். என்னுடைய உயிரை வேண்டு மானாலும் கொடுத்துவிடுகிறேன். தங்களுக்கு என்ன உதவி தேவை என்பதைச் சொல்லுங்கள். இந்த கன்னத்தில் நிறைவேற்றுகிறேன்' என்றார். இளவரசர் சந்தோஷமாகப் புன்னகை செய்து, "சரி; இவ்வளவு தூரம் சொன்னீர்களே, அதுவே போதுமானது. எனக்கு நீங்கள் செய்யவேண்டிய உதவி ஒன்று இருக்கிறது. அதை நான் பிற்பாடு கேட்டுக்கொள்ளுகிறேன். அதைவிட்டு நாம் இப்போது முக்கியமான விஷயத்தைப் பேசுவோம். நான் பூர்ணசந்திரோதயத்தினிடம் போன விஷயத்தைப்பற் றி எல்லாச் சங்கதிகளையும் தெரிந்துகொள்ள நீங்கள் நிரம்பவும் ஆவலோடு இருப்பீர்கள். அதை முதலில் சொல்லிவிடுகிறேன் என்றார். மருங்காபுரி ஜெமீந்தார், "ஆம் ஆம். இன்றையதினம் உங்களை ஜெகன்மோகன விலாசத்துக்கு அனுப்பிய பிறகு என் மனம் வேறே எதிலேயும் செல்லவில்லை. தாங்கள் எப்போது திரும்பி வரப் போகிறீர்கள் என்று வழிபார்த்து ஜன்னலண்டை