பக்கம்:பூர்ண சந்திரோதயம்-2.pdf/160

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


154 பூர்ணசந்திரோதயம்-2 ரெண்டு கையும் எடுத்துக் குடும்பிடுவேன் அண்ணே! என்னோடெ புள்ளெ குட்டிக்களும் பொளச்சுப் போவாங்க என்றேன். உடனே கந்தன்தணிவான குரலில் ரகசியமாகப் பேகத் தொடங்கி, ' நீ பயப்பட வேணாம். இன்னமெ ஒன்னெக் காப்பாத்தறதுக்கு நானாச்சு. ஆனா, நீ எங் கிட்ட உண்மையாகவும் உறுதியாகவும் நடந்துக்கணும். தலை போனாலும் நம் பளொட ரகசியத்தை யாருக்கிட்டேயும் வெளியிடக்கூடாது. அந்த மாதிரி நடந்துக்கறேன்னு நீ கையடிச்சு சத்தியம் பண்ணிக்குடு. உனக்கு நான் உடனே நெசத்தெச் சொல்றேன்' என்றான். உடனே நான் கையடித்து, ஐயனாரப்பன், மதுரைவீரன் முதலிய குல தெய்வங்கள் எல்லாம் அறியப் பிரமாணம் செய்து கொடுத்தேன். அவன் திருப்தி அடைந்து, 'அண்ணே நான் ஊருக்கு வந்ததே ஒரு காரணமா வந்தேன். நான் இருக்கறது காசாநாடு. அந்த ஊருலெ கட்டாரித் தேவனுன்னு ஒருத்தன் இருக்கறானா, அவனைப் பத்தி நீ கேள்விப்பட்டிருப்பே. அவனோட ஆளு நானு. இந்தக் கூத்தாடிச்சு ஊட்டுலெ லச்சக்கணக்குலெ பணம் நகையெல்லாம் இருக்குதுன்னு அவன் கேள்விப்பட்டான். ஆனா, இவ தரையிலே சொரங்கம் வெட்டி அதுக்குள்ளாற இரும்பு பொட்டிலே எல்லாப் பொருளையும் வச்சிருக்கறான்னு எல்லா சனங்களும் சொல்லிக்கிட்டாங்க. அதுக்காவ அச்சே பாக்கறதுக்கு அவன் என்னை இங்கிட்டு அனுப்பிச்சு வச்சிருக்கான். நான் இந்த இரண்டு மாசகாலமா இவ ஊட்டுலெ வேலையிலே அமர்ந்து ஊட்டுக்குள்ளே பூந்து எல்லாச் சங்கதியையும் அறிஞ்சுகட்டாரிக்குச் சொன்னேன். நாளைதரிச்சு மைக்கானா பெரிய கொள்ளை நடக்கப் போவுது. கட்டாரித்தேவன் முப்பது ஆளுங்களை அளெச்சிக்கிட்டு சரியா பதினைஞ்சு நாளிக்கி வரப் போறான். எல்லாருமா ஊட்டுக்குள்ளாற நொளெஞ்சு கூத்தாடிச்சியையும் மவளுவளெயும் கட்டிப்போட்டுட்டு, சொரங்கத்துலே பூந்து சொத்துவளெ யெல்லாம் கொண்டு பூடப்போறோம். அப்ப,