வடுவூர் கே. துரைசாமி ஐயங்கார் 155 எங்கிளுக்கு ஆளுங்க ரொம்ப வேணும். அதுல நீயும் கலந்துக்கிட்டு எங்கிளுக்கு ஒத்தாசயா இருந்தா, ஒனக்கும் பங்கு வாங்கித் தர்றேன். இது ஒண்ணுலேயே நாம் ப எல்லோரும் பெரிய பணக்காரரு ஆயிப்பூடலாம். இதெப்போலெ அப்பப்ப இன்னும் பெரிய பெரிய இடத்துல கொள்ளை நடக்கும்; அதுலேயும் ஒன்னெச் சேத்துக்கறோம் ' என்றான். அந்த வரலாற்றைக் கேட்ட நான் எனக்குள் மிகுந்த ஆச்சரியம் அடைந்தேன். ஆனாலும் அதை வெளியில் காட்டிக் கொள்ளாமல், அவன் சொன்ன ஏற்பாடுகளுக்கு இணங்கினவன் போலவும், அதைப்பற்றி அளவற்ற சந்தோஷம் அடைந்தவன் போலவும் பாசாங்கு செய்து, "சரி, அண்னே! இனி நான் ஒன்னோட மனிசன். நீ உசிரெக் குடுக்கச் சொன்னாலும் குடுக்கத் தடையில்லை. நீ சொல்ற மாதிரியே நான் நடந்துக்கறேன்' என்றேன். அதைக் கேட்டுக் கந்தன் நிரம்பவும் திருப்தி அடைந்து நான் சொன்னதை எல்லாம் உண்மை என்று நம்பினான். நான் அதன்பிறகு வேறே பல விஷயங்களில் அவனுடைய மனசைத் திருப்பி அநேக கேள்விகள் கேட்டுக் கடைசியில், "ஆமா அண்ணே இந்த ரெண்டு மாசமா நீ இந்தக் கூத்தாடிச்சி ஊட்டுலே இருந்து வாறியே. நம்பகட்டாரித்தேவன் எப்பவாச்சும் இங்கிட்டு வந்து அவளோட வீட்டைப் பாத்திருக்கிறானா? புதுசா நாளெத் தரிச்சு ராத்திரி அவன் வந்தா, அவ ஊட்டுச் சொரங்கம் எல்லாம் அவனுக்குத் தெரியுமா? என்றேன். கந்தன், 'அவன் இந்த இரண்டு மாசத்துலே எத்தினியோ தரம் இங்கிட்டு வந்திருக்கிறான். வீட்டையும் பார்த்திருக்கிறான். ஒரு நாள் பாதி ராத்திரியிலே எல்லோரும் துங்கச்செ உள்ளேயும் பூந்து எல்லா எடத்தையும் பார்த்திருக்கிறான். நாலஞ்சு நாளைக்கிமின்னே கூட, ஒரு சின்ன வேடிக்கை பண்ணிப்புட்டான்' என்றான். அதைக் கேட்ட நான் ஆச்சரியத்தைக் காண்பித்து, 'அது என்ன வேடிக்கை அண்ணே என்றேன். உடனே கந்தன் சந்தோஷமாகச் சிரித்து, 'நம்ப தஞ்சாவூரு மவராசாவோடெ புள்ளெ இருக்கறாரல்ல.
பக்கம்:பூர்ண சந்திரோதயம்-2.pdf/161
Jump to navigation
Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை
