பக்கம்:பூர்ண சந்திரோதயம்-2.pdf/164

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

158 பூர்ணசந்திரோதயம்-2 அவன் கட்டாரித்தேவனுடைய கொள்ளைக் கூட்டத்தைச் சேர்ந்தவனா அவன் நம்பிக்கைக்குப் பாத்திரமானவன் என்று நினைத்து அன்னத்தம்மாளும், இளவரசரும் அவனிடத்தில் எத்தனையோ ரகசிய சங்கதிகளைச் சொல்லி இருக்கிறார்களே! அன்றைய தினம் ராத்திரி எங்களைக் கொண்டுபோனது மாரியம்மன் கோவிலுக்கா அந்த ஊர் செட்டித் தெருவில் பங்களாவில் இருக்கும் பெரிய மனிதரும் அவருடைய சம்சாரமும் எதற்காக அப்படி ஒளிந்து கொண்டிருக்கிறார்கள்? இளவரசரிடத்தில் என்ன சங்கதி எழுதி வாங்கிக் கொண்டிருப்பார்கள்? உமக்கு ஏதோ அபாயம் நேர்ந்ததாகச் சொன்னீரே, அது எப்போது? என்ன அபாயம்?' என்றார். அதைக் கேட்ட போலீஸ் இன்ஸ்பெக்டர், 'மற்ற வரலாற்றையும் சொல்லிவிடுகிறேன் கேளுங்கள். அப்படி நானும் கந்தனும் வெகுநேரம் வரையில் ஆற்றின் மணலில் இருந்து பேசிக்கொண்டிருந்து சாப்பாட்டுக்கு நேரமாகிறது என்று ராத்திரி சுமார் 10 மணிக்கு அவ்விடத்தை விட்டு அவனுடைய வீட்டுக்கு வந்து சேர்ந்தோம். இன்னம் இரண்டொரு நாள் அவனுடைய வீட்டிலேயே இருந்து இன்னம் கிரகிக்கக் கூடிய ரகசியங்களை எல்லாம் கிரகித்துக் கொள்ளலாமென்ற எண்ணத் தோடும், அன்றைய தினமே எல்லாவற்றையும் ஊன்றி ஊன்றி கேட்பது சந்தேகத்துக்கு இடம் கொடுக்கும் என்ற எண்ணத் தோடும் நான் கேள்விகளை அவ்வளவோடு நிறுத்திக் கொண்டேன். கந்தனுடைய பெண்ஜாதி அன்றைய தினம் எனக்காக நல்ல கறியும் சோறும் சமைத்திருந்தாள். அவனும் நானும் நன்றாக போஜனம் செய்து எழுந்தோம். எழுந்தவர்கள் வாசல் திண்ணையில் போய் உட்கார்ந்து கொண்டு வெற்றிலை புகையிலை முதலியவை களைப் போட்டு மென்று கொண்டு மேலும் இரண்டு நாழிகை வரையில் வேடிக்கையாகப் பேசிக் கொண்டிருந்தோம். பிறகு கந்தன் இரண்டு பாய்களையும் தலையணைகளையும் கொண்டு