பக்கம்:பூர்ண சந்திரோதயம்-2.pdf/17

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


வடுவூர் கே. துரைசாமி ஐயங்கார் - 13 யிலேயே நின்று கொண்டிருந்தேன். என்ன நடந்தது? அங்கே போயிருந்தீர்களா? அவள் என்ன சொன்னாள்? ஏதாவது வழிக்கு வந்தாளா?” என்றார். இளவரசர், 'நான் போய்விட்டு நேராக அங்கே இருந்துதான் இவ்விடத்துக்கு வருகிறேன். அவளோடு ஒரு மணிநேரம் பேசிக் கொண்டிருந்தேன். உண்மையிலேயே பூர்ணசந்திரோ தயம் அபாரமான அழகுடையவளாகத்தான் இருக்கிறாள். அவளைப்பற்றி எல்லோரும் இவ்வளவு ஸ்தோத்திரமாகச் சொன்னதெல்லாம் பொய்யல்ல. அவளுடைய கட்டழகு எப்படிப்பட்டதென்பது நேரில் பார்த்தால்தான் உள்ளபடி தெரியுமேயன்றி, அதை வார்த்தைகளால் வர்ணித்துச் சொல்ல எவராலும் முடியாது. ஆகையால், இவர்கள் சொன்னதெல்லாம் அவளுடைய அழகைக் குறைத்துச் சொன்னதாக வைத்துக் கொள்ள வேண்டும்' என்றார். ஜெமீந்தார்:- (ஒருவித சஞ்சலம் அடைந்தவராய்) சரி, பூரண சந்திரோதயம் மகாராஜாவிடத்தில் ஏதோ மோகனாஸ்திரப் பிரயோகம் செய்துவிட்டாள் போலிருக்கிறது. இளவரசர்:- ஆம்; உண்மைதான்.அவளுடைய மோகனாஸ் திரங்கள் சாதாரணமானவை அல்ல. அவளைப் படைத்த ஈசுவரன் கூட அவளைக் கண்டால் கலங்கிப் போவான் என்று நீங்கள் நிச்சயமாக எண்ணிக் கொள்ளலாம். அவளும் நானும் வெகுநேரம் பேசிக்கொண்டிருந்தோம். அவளுடைய மனசை என்னுடைய விருப்பப்படி திருப்ப நான் பட்டபாடு இவ்வளவு அவ்வளவல்ல. ஆகா! அவளுடைய வாக்கு சாமர்த்தியமும், புத்திக் கூர்மையும், யுக்தியும் என்னவென்று சொல்லுவேன்! வேறே எப்பேர்ப்பட்ட மனிதர் அவளிடம் போய்ப் பேசினாலும், அவமானப் பட்டுத்தான் திரும்ப வேண்டும். இப்பேர்ப்பட்ட அதிமேதாவிகளான பெண் பிள்ளைகள் தாமாகக் கனிந்து ஒரு புருஷரிடத்தில் அவர்கள் பிரேமையில் காதலும் கொண்டால் மாத்திரம் சுகம்