பக்கம்:பூர்ண சந்திரோதயம்-2.pdf/170

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


162 பூர்ணசந்திரோதயம்-2 உண்டாக்கின. நான் வாயைத் திறந்து பேச அவன் இடம் கொடுத்திருந்தால், நான் அவனிடத்தில் ஏதாவது பொய் சொல்லி அவனை ஏமாற்ற முயன்றிருக்கலாம். அல்லது, கூச்சலிட்டு அந்தத் தெருவில் இருக்கும் மனிதரை உதவிக்கு அழைத்திருக்கலாம். நான் வாயைத் திறந்து கூச்சலிடமுடியாமல் அவன் என்னுடைய தொண்டையை இறுகப் பிடித்து நெறித்துக் கொண்டிருந்தான். ஆகையால், அந்த அபாயத்தில் என்ன செய்கிறதென்பதை உணராமல் நான் பொறியில் அகப்பட்ட எலிபோலத் தவித்திருக்க உடனே கட்டாரி கந்தனைப் பார்த்து, 'அடேய் கந்தா நீ நம்முடைய ரகசியங்களை எல்லாம் இவனிடத்தில் சொல்லியிருக்கிறாய். இவனை நாம் சுயேச்சையாகப் போக விட்டால், இவன் போய் நம்மை வேரறுத்துவிட எத்தனிப்பான்; ஆகையால், இவன் இந்த ஊரை விட்டுப் போகாமல், இவனை நாம் ஒழித்துவிட வேண்டும். நீ உள்ளே போய் நல்ல கயிறாகப் பார்த்துக் கொஞ்சம் எடுத்துக்கொண்டு வந்து கால்களையும் கைகளையும் கட்டிவிடு; கந்தைத் துணி இருந்தால் கொஞ்சம் கொண்டுவா; வாயில் வைத்துஅடைத்து விடுவோம்' என்றான். உடனே கந்தன் உள்ளே போய் விட்டான். அப்போதே என்னுடைய உயிரில் முக்கால் பாகமும் போய்விட்டது என்று சொல்ல வேண்டும். எனக்குக் குலைநடுக்கம் உண்டாயிற்று. நாம் இனி தப்புவதில்லை என்ற நிச்சயம் என் மனதில் உண்டாகி விட்டது. கொஞ்சநேரத்தில் கந்தன் வெளியில் வர, கந்தைத் துணிப்பந்து என் வாய்க்குள் வைத்துத் திணிக்கப்பட்டது. என்னுடைய கைகளும் கால்களும் தாம் புக் கயிற் றால் கட்டப்பட்டுப் போயின. உடனே கட்டாரி தனது பிடியை விட்டுவிட்டான். நான் மூச்சுவிட முடியாமல் திக்குமுக்காடிக் கொண்டிருந்தேன். என்னுடைய வாய் கிழிந்துபோய் விடும் போல ஆகிவிட்டது. கைகால்கள் எல்லாம் இரத்த ஒட்டம் தடைப்பட்டதனால் மரத்து உணர்வற்று விண் விண்னென்று துடிக்கலாயின. அப்போதே நான் பிணம்போல