பக்கம்:பூர்ண சந்திரோதயம்-2.pdf/171

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


வடுவூர் கே. துரைசாமி ஐயங்கார் . 163 மாறிப் போனேன். உடனே அவர்கள் இரண்டு பேரும் என்னை எப்படிக் கொல்வது என்பதைப் பற்றித் தங்களுக்குள் கலந்து யோசனை செய்தனர். பக்கத்தில் உள்ள ஆற்றில் ஒரிடத்தில் இருக்கும் மடுவில் என்னைக் கொண்டுபோய்ப் போட்டு விடுவது என்று அவர்கள் தீர்மானித்தனர். அந்த மடுவில் இரண்டாள் ஆழம் ஜலம் இருப்பதாகவும், அவ்விடத்தில் முதலைகள் இருப்பதாகவும் அவர்களுடைய சம்பாஷணையி லிருந்து நான் தெரிந்து கொண்டேன். அப்போதே எனக்கு அநேகமாக ஸ்மரனை தப்பிப் போய்விட்டது. அதன்பிறகு அவர்கள் இருவரும் என்னைப் பிடித்துத் தூக்கிக்கொண்டு ஆற்றங்கரைக்குப் போனார்கள். ஆனால், என்னுடைய அதிர்ஷ்டவசத்தினால்,அவ்விடத்தில் அதற்குள் ஒரு மாறுபாடு உண்டாகியிருந்தது. நானும் கந்தனும் அன்று சாயுங்காலம் அந்த ஆற்றங்கரையில் மணலின் மேல் உட்கார்ந்து பேசிக்கொண்டிருந்த போதே, அந்த ஆறு பெருக்கெடுத்துக் கொண்டிருந்தது போலிருக்கிறது. ராத்திரி ஒரு மணிக்குள் ஆறு முழுவதும் தண்ணிர் நிரம்பி வெள்ளமாக பிரவாகம் போய்க் கொண்டிருந்தது. அவர்கள் உடனே தங்களுடைய மனசை மாற்றிக்கொண்டார்கள். என்னைத் துக்கிக் கொண்டு வெகு தூரம் போய் முதலையிருக்கும் மடுவில் போட வேண்டிய அவசியம் இல்லை என்று எண்ணி, அந்த ஆற்றின் பாலத்தில் இருந்தபடி என்னை ஆற்றின் நடுவில் வெள்ளத்தில் போட்டு விட்டார்கள். போட்டவர்கள் நான் எப்படியும் வெள்ளத்தில் ஆழ்ந்து இறந்துபோய் விடுவேன் என்று நிச்சயித்துக் கொண்டு அவ்விடத்தை விட்டுப் போய்விட்டனர். தண்ணிர் வெள்ளத்தில் நான் தலைகுப்புறப் போய் விழுந்தேன். விழுந்த வேகத்தில் என் வாயில் இருந்த துணிப்பந்து நழுவி வெளியில் வந்துவிட்டது. உடனே என்னுடைய பிராணன் திரும்பியது. சுவாசம் சரியாக வரத் தொடங்கியது. நான் விழுந்த இடத்தில் தண்ணீர் நிலைக்காமல் இருந்தது. ஆகையால், கட்டப்பட்டிருந்த கைகளையும் கால்களையும் உபயோகித்து