பக்கம்:பூர்ண சந்திரோதயம்-2.pdf/172

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


重64 பூர்ணசந்திரோதயம்-2 நீந்தமாட்டாமல் நான் உருண்டு புரண்டு மேலே வந்து உள்ளே ஆழ்ந்து கொஞ்சதூரம் கிழக்கு முகமாகப் போய்விட்டேன். நான் நீஞ்சுவதற்கு நன்றாகப் பழகி இருந்தேன். ஆகையால், கட்டப்பட்ட கால்களை உபயோகப்படுத்தி உந்தி உந்தி நான் தண்ணிரின்மேல் வந்துகொண்டே போக, தற்செயலாக என்னுடைய கால்கள் ஒரு மணல் திட்டின் மேல் பட்டன. நான் உடனே அவ்விடத்தில் உறுதியாக நின்றுகொண்டு, கட்டப்பட்டிருந்த என்னுடைய கைகளை வாய்க்குக் கொண்டுபோய், நெடுநேரம் வரையில் பல்லால் கடித்துக் கடித்துக் கட்டை விலக்கிக்கொண்டேன். அதன் பிறகு கைகளை உபயோகித்து என்னுடைய கால் கட்டை அவிழ்த்துக் கொள்வது சுலபமாகவே இருந்தது. உடனே நான் நீந்திக் கரை ஏறினேன். நான் மறுபடியும் ஊருக்குள் போய், ஊர் ஜனங்களினுடைய உதவியைக் கொண்டு கந்தன் வீட்டுக்குப் போய் அவர்கள் இரண்டு பேரையும் பிடிக்கலாம் என்ற எண்ணம் உண்டானது. ஆனாலும், அது சரியல்ல என்று நினைத்துக் கொண்டேன். நான் இறந்துபோனதாகவே, அவர்கள் எண்ணிக் கொண்டிருப்பது நல்லதென்று நான் நினைத்து, அவ்விடத்தை விட்டு ரஸ்தாவுக்கு வந்து மெல்ல மெல்ல நடந்து விடியற்காலையில் தஞ்சாவூருக்கு வந்து சேர்ந்தேன். அதாவது வெள்ளிக்கிழமையாகிய நேற்றையதினம் காலையில் நான் தஞ்சாவூருக்குத் திரும்பி வந்தேன். அவர்கள் என்னைப் படுத்தி வைத்த பாட்டினால் நான் நிரம் பவும் அலுத்துப் போயிருந்தேன். ஆகையால், நேற்று சாயுங்காலம் வரையில் படுக்கையை விட்டு நான் எழுந்திருக்க முடியாமல் போய்விட்டது. இன்று விடியற்காலம் நான் ஒரு குதிரை வண்டியில் ஏறிக்கொண்டு மாரியம்மன் கோவிலுக்குப் போய், ஊருக்கு வெளியிலேயே இறங்கி, பிச்சைக்காரனைப் போல உருமாறி செட்டித் தெருவில் நுழைந்து கந்தன் சொன்ன பங்களாவைக் கண்டேன். அந்தத் தெருவில் அந்த ஒரு பங்களாதான் இருக்கிறது. அதற்குள் இருப்பவர் யார்