பக்கம்:பூர்ண சந்திரோதயம்-2.pdf/174

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


வடுவூர் கே. துரைசாமி ஐயங்கார் 1 65 என்பதைப் பற்றி நான் அக்கம் பக்கத்தில் விசாரித்தேன். மாசிலாமணிப் பிள்ளையென்ற ஒரு தணிகரும், அவருடைய யெளவனப் பெண்ஜாதியும் சில தினங்களாக வந்திருப்ப தாகவும், அவர்கள் வீட்டைவிட்டு வெளியிலேயே வருவ தில்லை என்றும் சொன்னார்கள். நான் பிச்சை கேட்கிறவன் போல உள்ளே நுழைந்து பார்த்தேன். மாசிலாமணிப் பிள்ள்ை என்பவர் என் கண்ணில் படவில்லை. ஆனால், ஒர் அறைக்குள் இருந்து ஒரு பெண் வெளிப்பட்டு இன்னோர் அறைக்குப் போனதை நான் பார்த்து அப்படியே பிரமித்துப் போய்விட்டேன்! ஆகா! அந்தப் பெண்ணை தெய்வலோகத்து ரம்பை, திலோத்தமைகளுக்கே ஒப்பிட வேண்டும். வயசு சுமார் பதினெட்டு இருக்கலாம். அந்தப் பெண்ணைப் போல அவ்வளவு சொகுஸ்ான வடிவழகியை நான் இதுவரையில் கண்டதே இல்லை. அன்றைய தினம் இளவரசர் பார்த்த பார்சீஜாதிப் பெண்ணைப்பற்றி அவர் வர்ணித்துச் சொன்ன குறிப்புகளும், நடைஉடை பாவனைகளும், சாயலும் இந்தப் பெண்ணிடத்தில் அப்படியே இருக்கின்றன. ஆகையால், அந்தப் பெண்ணே அன்றையதினம் இளவரசரை ஏமாற்றியவள் என்பதை நிச்சயமாக எண்ணிக்கொள்ளலாம். அந்த பங்களாவின் அமைப்பும் நீங்கள் கண்டதாகச் சொன்ன படியே இருக்கிறது. ஆகையால், உங்களை வழிமறித்து அழைத்துக் கொண்டு போன இடம் அந்த பங்களா என்பதை யும் தாங்கள் நிச்சயமாக வைத்துக் கொள்ளலாம் என்றார். அந்த வரலாற்றைக் கேட்ட மருங்காபுரி ஜெமீந்தார் மிகுந்த வியப்பும் களிப்பும் அடைந்தவராய், 'அப்படியா! அந்தப் பெண்ணை நீர் பார்த்தீரா? அவள் உண்மையில் நல்ல அழகான பெண்தானா?" என்றார். இன்ஸ் பெக்டர்:- ஒ! தடையில்லை. அவளை ரதிதேவி என்றே சொல்லவேண்டும் அன்றி மனிதப் பிறப்பைச் சேர்ந்தவள் என்று சொல்லவே கூடாது.