பக்கம்:பூர்ண சந்திரோதயம்-2.pdf/18

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


பூர்ணசந்திரோதயம்-2 14 -غـ, உண்டாகுமே தவிர, இவர்களை வலுக்கட்டாயமாக நம்முடைய வசத்தில் திருப்புவதும், இவர்களிடம் இன்பம் அடைய நினைப்பதும் பலியாத காரியந்தான். ஜெமீந்தார்:- (திகைப்பும் கலக்கமும் அடைந்து) ஒகோ! அப்படியா ஆனால், அவள் என்னதான் சொன்னாள்? இளவரசர்:- (புன்சிரிப்போடு) அவள் எதைத்தான் சொன்னாலும், நான் அவளை அவ்வளவு சுலபத்தில் விட்டுவரக் கூடியவனா அவள் எவ்வளவோ தந்திரமாகப் பேசினாள். நான் அதற்குமேல் குள்ளநரி வேஷம்போட்டு கடைசியில் அவள் என்னுடைய கருத்துக்கு இணங்கும் படி செய்துவிட்டே வந்தேன். அவள் எனக்கு ஆசை நாயகியாயிருக்க ஒப்புக் கொண்டுவிட்டாள். ஜெமீந்தார்: (ஆனந்தப் பெருக்கினால் துள்ளிக்குதித்து தேன் குடித்த நரிபோலப் பல்லைக்காட்டி) பேஷ் பலே! வழிக்கு வந்தாளா சரி என்பாடு யோகந்தான்.சரி; அதற்கு மேல் என்ன நடந்தது? மேலே நடக்கவேண்டிய காரியங்களுக்கு அவளிடத்தில் ஏதாவது ஏற்பாடு செய்து நாள் குறித்துவிட்டு வந்திருக்கிறீர்களா? இளவரசர்:- ஒ ஏற்பாடு செய்திருக்கிறேன். நாளைய தினம் ராத்திரி சரியாக ஒன்பது மணிக்கு ஒரு பெட்டிவண்டி அவளுடைய ஜாகையின் வாசலில் போய் நிற்க வேண்டும். அதற்கு முன்னாகவே, அவள் தன்னுடைய போஜனம் முதலியவைகளை முடித்துக்கொண்டு தயாராக இருப்பாள்; சரியாக ஒன்பது மணிக்குப் புறப்பட்டு அந்தப் பெட்டி வண்டியில் ஏறிக்கொண்டு வந்து சேருவாள். ஜெமீந்தார்:- (மிகுந்த ஆவலோடும் ஆசையோடும்) பேஷ்! நல்ல ஏற்பாடு! அந்த வண்டியை நேராக இந்த இடத்துக்கு ஒட்டிக் கொண்டு வந்துவிடும்படி வண்டிக்காரனுக்கு உத்தரவு செய்திருக்கிறீர்களோ? அப்படித்தான் செய்யவேண்டும்.