பக்கம்:பூர்ண சந்திரோதயம்-2.pdf/183

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

172 பூர்ணசந்திரோதயம்-2 அந்த கந்தர்வ மாடத்திற்குள், நமது பூர்ணசந்திரோதயம் நுழைந்து இரண்டோரடி தூரம் நடக்குமுன், சற்று தூரத்தில் கோடிசூரியப் பிரகாசமாக மின்னிய நவரத்ன மஞ்சத்தில் மல்லிகை, ரோஜா முதலிய புஷ்பங்களின் இதழ்கள். ஒரு முழ உயரம் பரப்பப் பெற்றிருந்த வெகு லொகுஸ்ான வெல்வெட்டு மெத்தையின் மேல் உட்கார்ந்து கொண்டிருந்த இளவரசர் சடக்கென்று கீழே இறங்கி அவளுக்கு எதிராக ஆவலோடு பாய்ந்து, 'கண்ணே பூர்ணசந்திரோதயம்! இப்படி வா இந்தக் கட்டிலின் மேல் உட்கார்ந்து கொள்' என்று கனிவாகக் கூறியவண்னம், புன்னகையாலும், மகிழ்ச்சியாலும் தமது முகத்தை மலர்த்திய வண்ணம், அவளுக்குக் கைவாகு கொடுத்து வாத்சல்யத்தோடு அழைத்துவர எத்தனிக்க, அவள் அவரது கைக்கு அகப்படாமல், சிறிது அப்பால் நழுவிச் சென்று, 'இல்லை இல்லை நான் இங்கே உட்கார நேரமில்லை. இரண்டொரு வார்த்தைகள் பேசிவிட்டு நான் உடனே போய்விட வேண்டும். இந்த அகால வேளையில் நான் இங்கே வந்து, அலுத்துப்போய்த்துங்கிக் கொண்டிருந்த மகாராஜாவை எழுப்பும் படியான அபராதத்துக்கு ஆளானேன். மகாராஜா கோபிக்கக் கூடாது என்று நயமாகக் கூறினாள். அவளது சந்திரவதனம் தனது இயற்கையான குளிர்ச்சியையும் இனிமையையும் காட்டாமல், உள்ளடக்கிய விசனத்தையும் அதிருப்தியையும் காண்பித்தது. அவளது மாறுபட்ட நிலைமையையும் நடத்தையையும் கண்டு ஒருவாறு வியப்படைந்த இளவரசர் முன்னிலும் அதிக இளக்கமாகவும் நயமாகவும் பேசத் தொடங்கி, "ஆகா! பூர்ணசந்திரோதயம்! இன்றையதினம் ஒன்பது மணிக்கு நீ வரப்போகிறாய் என்று நான் என்னென்ன சிறந்த ஏற்பாடுகள் செய்திருந்தேன் தெரியுமா? நான் கடைசியாக வண்டியை அனுப்பப் போன சமயத்தில் நீ அனுப்பிய கடிதம் வந்து சேர்ந்தது. அதைக் கண்டவுடனே, என் மனம் அடைந்த ஏக்கத்தையும்