பக்கம்:பூர்ண சந்திரோதயம்-2.pdf/185

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


வடுவூர் கே. துரைசாமி ஐயங்கார் 173 வெகுநேரம் வரையில் மன நிம்மதி இல்லாமல் சங்கடப் பட்டுக் கொண்டு உட்கார்ந்துவிட்டு இப்போது தான் அரை நாழிகைக்கு முன் படுத்துத் துங்க ஆரம்பித்தேன். மெய்க் காவலர் வந்து எழுப்பி நீ வந்திருப்பதாகச் சொன்னான். உன் கடிதத்தை நான் கண்டபிறகு, இன்றைய தினம் நீ மறுபடியும் வந்து இப்படி என்னை இன்பசாகரத்தில் ஆழ்த்தப் போகிறாய் என்று நான் கொஞ்சமும் எதிர்பார்க்கவே இல்லை. ஏன் உன்முகம் ஒரு மாதிரியாக இருக்கிறது? இன்னமும் உடம்பு அசெளக்கியமாகவே இருக்கிறதா?' என்றார். அந்தரங்கமான அன்போடும் பட்சத்தோடும் பேசப்பட்ட அவரது வார்த்தைகளைக் கேட்ட பூர்ணசந்திரோதயம், “என்ன ஆச்சரியம்! நானாவது தங்களுக்குக் கடிதம் எழுதவாவது? நான் இதுவரையில் தங்களுக்காவது வேறு யாருக்காவது கடிதம் எழுதியதே இல்லையே! என்றாள். இளவரசர் திடுக்கிட்டு முன்னிலும் பன்மடங்கு அதிகரித்த வியப்படைந்து, 'நீ எழுதியதுபோல சாயுங்காலம் எட்டரை மணிக்கு எனக்கொரு கடிதம் வந்ததே! நீ சொல்வதைப் பார்த்தால், ஏதோ மோசடி நடந்திருப்பதாகத் தெரிகிறது. அதனால்தான் நான் உன்னைத் தொடக்கூட நீ இடங்கொடுக்க மாட்டேன் என்கிறாயா? உன் முகம் கோபத்தினால் ஜ்வலிப்பது இப்போதுதான் தெரிகிறது!’ என்று கூறி மிகுந்த சஞ்சலத்தோடு அவளண்டை நெருங்கினார். அப்போது பூர்ண சந்திரோதயத்தினது முகம் மேகங்களினால் மறைக்கப்பட்ட பூர்ணசந்திரன்போல, ஆத்திரத்தினால் கருத்து அவளது கண்களிலிருந்து கண்ணிர் ததும்பிக் கன்னங்களின் வழியாகக் கீழே வழிந்தது. அவள் நிரம்பவும் ஆத்திரத்தை உள்ளடக்கிக் கொஞ்சலாகவும் சலுகையாகவும் பேசத் தொடங்கி, 'என்மேல் கோபம் இருந்தால் என்னை இப்படிப் பட்ட அவமானத்துக்கும், இழிவுக்கும் கொடுரமான தேகத் துன்பத்துக்கும் ஆளாக்கி அவமரியாதைப் படுத்துவதைவிட