பக்கம்:பூர்ண சந்திரோதயம்-2.pdf/186

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

174 பூர்ணசந்திரோதயம்-2 என்னை மகாராஜாவே தங்களுடைய கையால் கொன்று போட்டிருக்கலாம். அதுவே எனக்குப் பெருத்த உதவியாக இருந்திருக்குமே!’ என்று கூறி முன்னிலும் பன்மடங்கு அதிகமாகப் பிணங்கி ஒரு பக்கமாகத் திரும்பி நின்றாள். அவளது விபரீத நிலைமையைக் கண்டு மிகுந்த கலக்கமும் மன இளக்கமும் அடைந்த இளவரசர் மறுபடியும் அவளண்டை நெருங்கி அன்பாகவும் மிருதுவாகவும் அவளது அழகுவழிந்த மேனியைத் தொட்டு அவளது மோவாயில் தமது கையை வைத்துக் கொஞ்சி, 'கண்ணே பூர்ணசந்திரா கோபிக்காதே; நான் உன் விஷயத்தில் எவ்விதத் தவறும் செய்யவில்லை. இனி என் ஆயிசுகால பரியந்தம் செய்யவும் மாட்டேன். நான் அறியாமல் என்னால் ஏதாவது தவறு ஏற்பட்டிருந்தாலும், அதை நீ பாராட்டாமல் என்னை மன்னித்துக்கொள்ள வேண்டும். நான் பிறந்தது முதல் எப்படிப்பட்ட உயர்வான மனிதரிடத்திலும், எப்படிப்பட்ட உன்னதமான ரதிதேவியிடத்திலும் நான் மன்னிப்பு என்ற சொல்லை உபயோகித்தே அறியாதவன். அந்த வார்த்தை நான் அறியாமலே உன் விஷயத்தில் என் வாயிலிருந்து வந்ததிலிருந்து உன்னை நான் இந்த உலகத்திலுள்ள சகலமான மனிதர்களுக்கும் உயர்ந்தவளாகவும் அருமையானவளாகவும் மதிக்கிறேன் என்பதை நீ அறிந்து கொள்ள வேண்டும்' என்று மிக மிகக் கனிவாகப் பேசினார். அவரது உண்மையான வாஞ்சையையும் மதிப்பையும் கண்டு ஒருவாறு சாந்தமடைந்த பூர்ணசந்திரோதயம் அவரது பக்கம் திரும்பி, நான் ஏதோ கடிதம் எழுதியதாகச் சொன்னீர்களே! அதைக்காட்டுங்கள். பார்க்கிறேன்' என்று கிள்ளைபோலக் கொஞ்சலாக மொழிந்தாள். உடனே இளவரசர், 'அந்தக் கடிதம் அதோ பஞ்சணையின் மேல் இருக்கிறது. நீ நிற்கக்கூடாது. அங்கே வந்து உட்கார்ந்து கொள். நான் உடனே கடிதத்தைக் காட்டுகிறேன். நீ நிற்பதனால் உன்னுடைய இடை தள்ளாடுவதைப் பார்க்கப் பார்க்க,