பக்கம்:பூர்ண சந்திரோதயம்-2.pdf/187

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வடுவூர் கே. துரைசாமி ஐயங்கார் - 175 என்னுடைய உயிரே தள்ளாடித் துடிக்கிறது. வா. கட்டிலுக்குப் போகலாம்” என்று உருக்கமாகக் கூறியவண்ணம், தமது வலக் கரத்தைக் கொடுத்து அவளது இடையைச் சுற்றி அனைத்துப் பிடித்த வண்ணம், அந்த அழகிய கலாப மயிலை நடத்தி அழைத்துக் கொண்டு போய் நவரத்னக் கட்டிலை அடைந்து ஆவலோடும் ஆவேசத்தோடும் அவளைத் தூக்கிக் கட்டிலின் மீது உட்காரவைத்து தலையணையின் கீழ் இருந்த ஒரு கடிதத்தை எடுத்து அவளிடம் கொடுத்துவிட்டுத் தாமும் கட்டிலின் மேல் ஏறி அவளுக்குப் பக்கத்தில் உட்கார்ந்து கொண்டார். - அந்த மின்னாள் மிகுந்த ஆவலோடு அந்தக் கடிதத்தை வாங்கிப் பிரித்து, விளக்கு வெளிச்சத்தின் உதவியால் அதைப் படித்துப் பார்த்தாள். அதன் எழுத்துகள் முத்து முத்தாக அழகாய் இருந்ததன்றி, யாரோ ஸ்திரீயினால் எழுதப்பட்டன வாகத் தென்பட்டன. கடிதம் அடியில் வருமாறு எழுதப்பட்டி ருந்தது வெள்ளிக்கிழமை மாலை 8 மணி ராஜாதிராஜ ராஜ பூபதியான மாட்சிமை தங்கிய இளவரசர்கள் பொற் பாத கமலங்களின் அடியாள் பூர்ணசந்திரோதயம் சாஷ் டாங்க தெண்டன் சமர்ப்பித்துச் செய்து கொள்ளும் தாழ்மையான விக்ஞாபனம். இன்றைய தினம் சாயுங்காலம் ஏழரை மணி வரையில் என் உடம்பு சரியாக இருந்தது. அதன் பிறகு திடீரென்று கடுமையான ஜூரமும் தலைவலியும் வந்து என்னை வதைக்கத் தொடங்கிவிட்டன. ஆகையால், நான் தங்களுக்கு வாக்குக் கொடுத்த பிரகாரம் ஒன்பது மணிக்கு அவ்விடம் வரக்கூடாத நிலைமையில் இருக்கிறேன். நான் எதிர்பார்த்த சுகம் கிடைக்காமல் போகும்படி இப்படிப்பட்ட எதிர்பார்க்காத இடையூறு வந்து நேர்ந்தது முக்கியமாக என்னுடைய துர்ப்பாக்கியத்தின் கோளாறென்றே நான் எண்ணுகிறேன். என் உடம்பு இப்போது இருக்கும் శ్రీ.డి.ll-12