பக்கம்:பூர்ண சந்திரோதயம்-2.pdf/188

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


量76 - பூர்ணசந்திரோதயம்-2 நிலைமையிலிருந்து எனக்கு எப்போதுதான் குணம் ஏற்படும் என்பது நிச்சயமாகச் சொல்ல முடியவில்லை. ஆகையால், நான் தங்களைத் தரிசிப்பதற்கு உகந்த இன்னொரு நாளை இந்தக் கடிதத்தில் குறிப்பிட இயலவில்லை. என் தேக ஸ்திதி ஒழுங்குபட்டவுடனே நான் மறுபடி இன்னொரு விக்ஞாபனம் எழுதித் தெரிவித்துக் கொள்ளுகிறேன். அதுவரை யில் இந்த ஏழையை rமித்து அருள வேண்டும். இங்ங்னம், தங்களை என்றும் மறவாத அடியாள், - பூர்ணசந்திரோதயம். - என்று எழுதப்பட்டிருந்த கடிதத்தைப் படித்து முடித்த உடனே அந்தக் கட்டழகி, 'ஆகா! இது என்னால் எழுதப்பட்ட கடிதமே அல்லவே! நான் எழுதியதாக வேறே யாரோ மோசடியாக இதை எழுதி இருக்கிறார்கள். இது என்னுடைய எழுத்தே அல்ல. நான் நல்ல தேக ஸ்திதியோடு இப்போது இங்கே வந்திருப்பதே இந்தக் கடிதத்தை நான் எழுதவில்லை என்பதற்குப் போதுமான ருஜூவல்லவா!' என்று மிகுந்த வியப்போடும் மனக்கலக்கத்தோடும் கூறினாள். அந்தச்சொற்களைக் கேட்டஇளவரசர், அவளைக் காட்டிலும் பன்மடங்கு அதிகரித்த வியப்பும் திகைப்பும் அடைந்தவராய், 'ஆ! அப்படியா! இதை நீ எழுதவில்லையா! சரி; இதை எழுதினது யார் என்பது எனக்கு இப்போதுதான் தெரிந்தது. உனக்கு என்ன விதமான அவமரியாதை நேர்ந்தது? நீ இந்நேரம் எங்கே போயிருந்தாய்? எல்லா விவரங்களையும் சொல்” என்று கூறினார். மருங்காபுரிக் கிழவர்தான் அந்தப் பொய் கடிதத்தைத் தயார் செய்து தமக்கு அனுப்பி இருக்க வேண்டும் என்ற நிச்சயம் உடனே அவருக்கு ஏற்பட்டுவிட்டது. அவரது சொற்களைக் கேட்ட பூர்ணசந்திரோதயம், “விவரங்களை நான் சொல்வது இருக்கட்டும். நேற்றைய தினம் நமக்குள் அந்தரங்கமாக நடந்த விஷயங்களை எல்லாம்.