பக்கம்:பூர்ண சந்திரோதயம்-2.pdf/189

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


வடுவூர் கே. துரைசாமி ஐயங்கார் 177 மகாராஜா யாரிடத்தில் வெளியிட்டது என்பதைத் தயை செய்து எனக்குச் சொல்ல வேண்டும்' என்று கோபமாகக் கேட்டாள். இளவரசர் தாம் செய்த தவறைக் குறித்து உண்மையில் வருந்தி அவளிடத்தில் கரைகடந்த அன்பும் பச்சாதாபமும் கொண்டவராய், 'கண்ணே கோபித்துக் கொள்ளாதே நான் அந்த விஷயத்தில் செய்தது என்மேல் குற்றந்தான். நான் அப்படிச்செய்தது சுத்த முட்டாள்தனம்; பைத்தியக்காரத்தனம். நான் நம்முடைய ரகசியங்களை எல்லாம் வெளியிட்டு விட்டேன் என்று உன் மனம் நிரம் பவும் சஞ்சலப் படுவது நியாயமே. இந்த ஒரு தடவை மாத்திரம் நீ என்னை மன்னித்துக் கொள். இனிநான்நம்முடைய எந்த விஷயத்தையும் வெளியிட மாட்டேன் என்பதை நீ உறுதியாக எண்ணிக் கொள்ளலாம்' என்று கூறி மறுபடியும் அவளது மோவாயைப் பிடித்துக் கொஞ்ச, அவள் அவரது கையை மெதுவாக நகர்த்திப் பிடித்துக்கொண்டு, 'போனது போகட்டும். நடந்து போனதைப் பற்றி வருத்தப்பட்ட இனி ஆகப்போவது ஒன்றும் இல்லை. தங்களுடைய வண்டி சரியாக ஒன்பது மணிக்கு வரும் என்று நான் நன்றாக அலங்காரம் செய்துகொண்டு என்னுடைய காரியங்களை எல்லாம் முடித்துக்கொண்டு புறப்பட ஆயத்தமாக இருந்தேன். வண்டி சரியாக 9மணிக்கு வந்தது. நான் அதற்குள் உட்கார்ந்துகொண்டு போனேன். தாதிகள் என்னை அழைத்துக்கொண்டுபோய் மருங்காபுரி ஜெமீந்தாருடைய மாளிகையின் மேன்மாடத்தில் விட்டுக் கதவைப் பூட்டிக்கொண்டு போய்விட்டார்கள்' என்றாள். இளவரசர்:- (மிகுந்த கோபத்தோடு) என்ன ஆச்சரியம்! அந்தக் கிழவனுக்கு அவ்வளவு துணிச்சலும், துடுக்கும் ஏற்பட்டு விட்டனவா? உன்னை அப்படிச் சிறை வைத்து அவன் அதற்குமேல் என்ன செய்தான்? சீக்கிரமாகச் சொல். பூர்ணசந்திரோதயம்:- (புரளியாகப் புன்னகை செய்து) அவர் செய்தது நியாயந்தானே வெள்ளிக்கிழமை முறை