வடுவூர் கே. துரைசாமி ஐயங்கார் - 15. இல்லாவிட்டால், நம்முடைய ஒப்பந்தம் எப்படி நிறைவேறும்?
இளவரசர்: (இனிமையாகப் புன்னகை செய்து நயமாகப் பேசத் தொடங்கி) வாஸ்தவந்தான். அப்படித்தான் செய்ய வேண்டுமென்று நீங்கள் பிரியப்பட்டால், அப்படியே செய்துவிடலாம். அதைப்பற்றிச் சந்தேகமே வேண்டாம். அந்த விஷயம் இருக்கட்டும். உங்களுக்கு மகாராஜா என்ற பட்டம் ஏற்படுத்திக் கொடுப்பதற்குப் பதிலாக நீங்கள் எனக்கு ஒரு பதிலுதவி செய்வதாக வாக்குக் கொடுத்தீர்களே; அதை நான் சுத்தமாக மறந்து விட்டேன். அதைத் தருவீர்களோ, மாட்டீர்களோ?
ஜெமீந்தார்: அதைப்பற்றித் தாங்கள் ஏன் இவ்வளவு தூரம் சந்தேகப்படுகிறீர்கள்? அதற்கும் இதற்கும் என்ன சம்பந்தம்? தங்களுக்கு வேண்டிய உதவி எதுவாக இருந்தாலும் உடனே கேளுங்கள்; செய்கிறேன். பூர்ணசந்திரோதயத்தைப் பற்றிய முடிவைச் சொல்லுங்கள். என் மனம் கட்டுக்கு அடங்காமல் துடிக்கிறது. அந்த ரதிதேவியை மாத்திரம் தாங்கள். எப்படியும் எனக்குக் கொடுத்தே தீரவேண்டும்.
இளவரசர்:- நான் உங்களிடத்தில் கேட்கும் பதிலுதவி இந்தப் பூர்ணசந்திரோதயத்தைப் பற்றியதேயன்றி வேறல்ல.
ஜெமீந்தார்:- (திடுக்கிட்டு முற்றிலும் வியப்பும் கலக்கமும் முகமாறுதலும் அடைந்து) என்ன தாங்கள் சொல்வது எனக்கு ஒன்றும் விளங்கவில்லையே! நம்முடைய ஒப்பந்தத்தை நிறைவேற்றத் தங்களுக்கு இஷ்டமில்லையா?
இளவரசர்:-(நயமாகவும் உருக்கமாகவும் பேசத் தொடங்கி) ஜெமீந்தார் ஐயா! என்னுடைய குணம் உங்களுக்கு நன்றாகத் தெரிந்திருந்தும், நீங்கள் என்னிடத்தில் இப்பேர்ப்பட்ட கேள்வி கேட்பது சரியல்ல. நான் இதுவரையில் நடந்து கொண்டதி லிருந்து நான் அப்படி வாக்குறுதியை மீறி அயோக்கியத்தனமாக நடக்கக் கூடியவன் என்பது கொஞ்சமாவது தெரிகிறதா? kg.é.H-2
பக்கம்:பூர்ண சந்திரோதயம்-2.pdf/19
Jump to navigation
Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை
