பக்கம்:பூர்ண சந்திரோதயம்-2.pdf/190

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


178 பூர்ணசந்திரே ாதயம்-2 அவருடையது தானே அவர் மேல் ஆத்திரப்படுவதில் உபயோகம் என்ன? . இளவரசர்:- என்ன ஆச்சரியம்! அந்த விவரங்கூட உனக்குத் தெரிந்திருக்கிறதா? அதையும் அந்தக் கிழவரே சொன்னாரா? பூர்ணசந்திரோதயம் :- அதை அவர் சொல் வாரா அந்த சூரக்கோட்டைப் பாளையக்காரர்தான் சொன்னார். இளவரசர்:- (கோபங்கொண்டு) அந்த சூரக்கோட்டைப் பாளையக்காரன் இவ்வளவு அயோக்கியத்தனமாக நடப்பார் என்று எனக்கு ஏற்கெனவே தெரிந்திருந்தால், அவனை நான் எனக்குப் பக்கத்திலேயே வரவிட்டிருக்க மாட்டேன். இனிமேல் அவன் என்னிடத்தில் வந்தால், பாராக்காரனை விட்டு அவனைக் கொண்டு போய் வீதியில் விடச் சொல்லுகிறேன். பூர்ணசந்திரோதயம் :- அவர் மேல் மாத்திரம் ஆத்திரப்படுவது நியாயமாகுமா? ஆண்பிள்ளை ஒருவருக் கொருவர் பேசிக் கொண்டதை அவர் என்னிடத்தில் வெளியிட்டார். மகாராஜா, தமக்கும் தம்மிடத்தில் உண்மை யான காதல் கொண்ட ஒரு பெண்பாலுக்கும் அந்தரங்கத்தில் நடந்ததும், பிறருக்குத் தெரியத் தகாததுமான ரகசியத்தை வேறு ஒருவரிடம் வெளியிட்டதைவிட அது பெரிய குற்றமல்ல. அது போகட்டும். தாங்கள்தான் ஏதோ அந்தரங்க நண்பராயிற்றே என்று அந்தக் கிழவரை மதித்து ரகசியத்தை வெளியிட்டால், அவர் இப்படியா நம்பிக்கைத் துரோகம் செய்கிறது? அவர் எப்படிப்பட்ட தந்திரந்தான் செய்தாலும், அது இந்தப் பூர்ணசந்திரோதயத்தின் இடத்திலா பலிக்கப் போகிறது. அவருக்குத் தகுந்த தண்டனையை நானே நடத்தி வைத்து நற்புத்தி புகட்டிவிட்டு வந்து விட்டேன். இதை அவர் இனி அவருடைய ஜென்மத்துக்கு மறக்கவே மாட்டார். மகாராஜா இனி அவரைக்காணும்போது இதைப்பற்றி அவரிடம் பிரஸ்தாபிக்க வேண்டும் என்ற அவசியமே இல்லை. நான்