பக்கம்:பூர்ண சந்திரோதயம்-2.pdf/192

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


180 பூர்ணசந்திரோதயம்-2 அவைகளை அருந்தி, உன் ஆயாசத்தை தீர்த்துக் கொள். பிறகு நாம் தாம்பூலந் தரித்து ஆனந்தமாக இருப்போம் ' என்று நிரம்பவும் கனிவாகக் கூறிக் கரைகடந்த மோக ஆவேசத்தோடு தமது இரு கைகளையும் கொடுத்து அந்த இன்ப வல்லியைப் பிடித்து அணைத்து ஆலிங்கனம் செய்து முத்தமிட முயல, அவள் அதற்கு இடங்கொடுத்தும் கொடுக்காமலும் கொஞ்சலாகப் பிணங்கி சடக்கென்று பஞ்சணையை விட்டுக் கீழே குதித்து, "ஐயோ! எனக்கு நிரம்பவும் நேரமாகிவிட்டது. நான் பத்தரை மணிக்கெல்லாம் திரும்பி வீட்டுக்கு வந்து விடுவதாகச் சொல்லிவிட்டு வந்திருக்கிறேன். என்னுடைய வேலைக்காரிகள் காத்திருப்பார்கள். இப்போது பதினொரு மணிக்கு மேல் ஆகிவிட்டது. என்னைப் பற்றி அவர்கள் இன்னம் கொஞ்ச காலத்துக்குத் தன்பான அபிப் பிராயம் கொள்ளக்கூடாது. ஆகையால், நான் மறுபடியும் இன்னொரு நாள் சாவகாசமாக வருகிறேன். இப்போதுதயைசெய்து என்னை விட்டுவிடுங்கள். என் தேகம் பதறுகிறது. என் மனம் முழுதும் வீட்டிலேயே இருக்கிறது. வேண்டாம்; விட்டு விடுங்கள்' என்று கெஞ் சிக் கூத்தாடிப் புறப்பட ஆயத்தமானாள். மோகலாகிரி தலைக்கேறி, மெய்மறந்து துடிதுடித்து நின்ற இளவரசர், கண்ணே உன் மனமென்ன கல்லா? என்னை உயிரோடு கொல்வதற்காகவா நீ இப்போது இங்கே வந்தாய்? இது உனக்கு தருமமா? என்னைப் பித்தனாக்கி விட்டாயே! நான் என்ன செய்யப்போகிறேன்! உன்னை விட்டுப் பிரிந்து நான் எப்படி சகித்திருப்பேன்? உன்மேல் வைத்த பிரியம் என்னை நெருப்பாகப் பற்றி தகிக்கிறதே! உன்னுடைய உண்மையான எண்ணந்தான் என்ன? அதை வெளியிடு. நான் உன் இஷ்டப்படி நடந்து கொள்ளுகிறேன்' என்று மிக மிக உருக்கமாக நைந்து இளகிக் கூற, அதைக்கேட்டபூர்ணசந்திரோதயம் தனது பற்களை இனிமையாகவும் வசீகரமாகவும் வெளியில் காட்டிக் கெஞ்சிக் கொஞ்சி அவரது மனதை மயக்கி மறுபடியும் அதி சீக்கிரத்தில் தான் அவருக்குக் கடிதம் எழுதி அவரது எண்ணத்தைப் பூர்த்தி