பக்கம்:பூர்ண சந்திரோதயம்-2.pdf/193

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வடுவூர் கே. துரைசாமி ஐயங்கார் - 181 செய்து வைப்பதாக வாக்குறுதி கூறி, அவரைக் கடைசி முறையாக ஆலிங்கனம் செய்து, விடை பெற்றுக்கொண்டு அந்த கந்தருவ மாளிகையை விட்டு வெளிப்பட்டு, ராஜபாட்டைக்கு வந்து அவ்விடத்தில் நின்று கொண்டிருந்த குதிரை வண்டியில் ஏறித் தனது ஜெகன்மோகன விலாசத்திற்கு வந்து சேர்ந்தாள். வந்து சேர்ந்தவள் தனது சயனக் கிரகத்தை அடைந்து படுத்துக் கொண்டாள். அன்றைய தினம் தான் ஒரு கருத்தை வைத்துக் கொண்டு இளவரசரது அரண்மனைக்குப் போக அது நிறைவேறாமல் போனதையும் மருங்காபுரி ஜெமீந்தாரின் மாளிகையில் நிகழ்ந்த சம்பவங்களையும் அதன்பிறகு தான் இளவரசரது மாளிகைக்குப் போய்த் திரும்பியதையும் பற்றி நெடு நேரம் வரையில் சிந்தித்திருந்து கடைசியில் துயிலில் ஆழ்ந்தாள். மறுநாளைய பிற்பகலில் மூன்றுமணி சமயமாயிற்று. பூர்ண சந்திரோதயம் என்னும் கட்டழகி தனது இயற்கைப்படி சீவிச் சிங்காரித்து மையிட்டுப் பொட்டிட்டு உயர்ந்த ஆடை ஆபரணங்களை அணிந்துகொண்டு யாரோ ஒருவரது வருகையை எதிர்பார்ப்பவள்போலப் படபடத்து உட்கார்ந்தும், அழகாக மலர்ந்து புன்னகை செய்து புஷ்பங்களைப் பறித்து மோந்தும், அவளைக் கண்டு கொஞ்சிக் குலாவிய பஞ்சவர்ணக் கிளி, பாரசீகக் கிளி முதலியவைகளை ஒவ்வொன்றாக எடுத்துப் பார்த்துக் கொண்டும் நலிந்து பொழுதைப் போக்கிக் கொண்டிருந்தாள். அப்போது தடதடவென்று யாரோஒருவர் மெத்தைப் படியின் மீது ஏறித் தான் இருந்த உப்பரிகைக்கு வந்த ஒசையைக் கேட்டு அவள் பல இடங்களிலும் சென்றிருந்த தனது கவனத்தை ஒருமுகப்படுத்தி அங்கே வந்து கொண்டிருந்த மனிதர் யாராக இருக்கலாம் என்று எண்ணமிட்டுக் கொண்டிருக்க, அடுத்த நிமிஷத்தில் சாமளராவ் புன்னகையாலும் மகிழ்ச்சியாலும் இனிமையாக மலர்ந்த முகத்தினனாக அவளுக்கு எதிரில்