பக்கம்:பூர்ண சந்திரோதயம்-2.pdf/194

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

182 பூர்ணசந்திரோதயம்-2 வந்து சேர்ந்தான். வந்தவன் சாமளராவ் என்பதை உணர்ந்தவுடனே பூர்ணசந்திரோதயத்தின் சஞ்சலம் நீங்கியது. மகிழ்ச்சியும் பூரிப்பும் கொண்ட பூர்ணசந்திரோதயம் அவனை நோக்கி இனிமையாகப் புன்னகை செய்தவளாய், 'வாருங்கள் அண்ணா!' என்று அந்தரங்கமான வாஞ்சையோடு அவரை வரவேற்று அழைத்துக்கொண்டு பக்கத்தில் இருந்த கூடத்திற்கு நடத்திக் கொண்டுபோய், 'உட்கார்ந்து கொள்ளுங்கள், அண்ணா!' என்று உவப்போடு அவனை உபசரித்த வண்ணம் தானும் ஆசனத்தில் உட்கார்ந்து கொண்டாள். பூர்ணசந்திரோதயத்தைக் கண்டு மட்டற்ற மன மகிழ்ச்சியும் குதுரகலமும் அடைந்தவனாய்க் காணப்பட்ட சாமளராவ், 'பூர்ணசந்திரோதயம் என்ன நீ இன்றைய தினம் கூட என்னை அண்ணா என்று கூப்பிடுகிறாய்? நான் உண்மையில் யார் என்பதை மறந்துவிட்டாயா?' என்றான். அதைக்கேட்ட பூர்ணசந்திரோதயம் அவனது கருத்து இன்னது என்பது அறிந்து கொள்ள மாட்டாமல் சிறிது நேரம் குழம்பித் திகைத்து, 'ஏன் அப்படிச் சொல்லுகிறீர்கள்? நீங்கள் எனக்கு எப்போதும் அண்ணாதானே! இன்றைக்கு அண்ணா என்கிற முறைமை ஏன் உதவாது?’ என்று ஒருவித கிலேசத்தோடு கேட்க, அவன் சிரித்துக்கொண்டு பேசத் தொடங்கி, "எங்கள் பந்தய ஏற்பாட்டின்படி இன்று என்னுடைய முறை என்பதை நீ மறந்து விட்டாய் போலிருக்கிறதே! இந்தப் பந்தயம் ஏற்படுத்திய ஆறு பேர்களுள் நான் ஒருவன்தான் உன்னிடத்தில் காதல் சம்பந்தமான வார்த்தைகளைச் சொல்லத் துணிய மாட்டேன் என்பது உனக்கு ஏற்கெனவே தெரியும் போலிருக்கிறது?’ என்று பரிகாசமாகப் பேசினாள். அதைக் கேட்ட பூர்ணசந்திரோதயம் சந்தோஷம் அடைந்து சிரித்து, 'ஒகோ! அப்படியா சங்கதி அதை நான் சுத்தமாக மறந்து போய்விட்டேன். எல்லோருக்கும் பரிமாறும்