வடுவூர் கே. துரைசாமி ஐயங்கார் 183
தாய்க்குக் கடைசியில் வெறும் பாத்திரந்தான் மிஞ்சும் என்று ஜனங்கள் பழமொழி சொல்வது பொய்யாகுமா? அதுபோல, இந்தப் பந்தயம் வைப்பதற்கு நீங்கள் மூலாதாரமான மனிதராக இருந்தும், கடைசியாக வந்தபடியால் உங்களுக்கு ஒன்றும் மிஞ்சவில்லை. இந்தப் பந்தயத்தின் முக்கிய கருத்து நிறைவேறி விட்டதாகையால், எனக்கு இந்தப் பந்தயதைப் பற்றிய நினைவே உண்டாகவில்லை' என்றாள்.
அதைக் கேட்ட சாமளராவ் மிகுந்த ஆச்சரியமும், சந்தோஷமும் கொண்டவனாய், 'எனக்கு மற்றது எல்லாம் அவ்வளவு வேடிக்கையாகத் தோன்றவில்லை. அந்த மருங்காபுரிக் கிழவன் நேற்று ராத்திரி தந்திரம் செய்து, கடைசியில் உன்னால் அவமானம் அடைந்ததுதான் எனக்கு நிரம்பவும் வேடிக்கையாக இருக்கிறது. இன்று காலையில் நீ எழுதிய கடிதத்திலிருந்து, நேற்று ராத்திரி நடந்த சங்கதிகளை எல்லாம் படித்த முதல் அந்தக் கிழவனுடைய விஷயத்தை நினைக்க நினைக்க, நான் என்னை மறந்து பல தடவை வாய் விட்டுச் சிரிக்கும் படி நேர்ந்தது. அவனுடைய அந்தரங்க வேலைக்காரனான கோவிந்தசாமியும், மற்றவர்களும் நேற்று ராத்திரி முழுதும் அவன் இருந்த இடத்துக்குப் போகாமலே இருந்தால், இன்று காலை வரையில் அவன் அந்த நாற்காலியிலேயே மாட்டிக்கொண்டு தானே கிடந்திருப்பான். ஐயோ பாவம்! நிரம்பவும் வயசான கிழவன். அந்த அவஸ்தையைப் பொறுக்க முடியாமல் செத்துப் போனாலும் போய்விடுவான். உன்கடிதத்தை நான்நம்முடைய அம்மாவிடம் படித்துக் காட்டினேன். அம்மாள் புதன்கிழமை தினம் கூட அவனிடம் போய் மூவாயிரம் ரூபாய் பிடுங்கிக் கொண்டு வந்தாள். கடைசியில் அவன் சுத்தப் பைத்தியக்காரன். அம்மாளிடத்தில் அவனுக்கு நிரம் பவும் பிரியம் உண்டு. ஆகையால் அவன் நாற்காலியில் மாட்டிக்கொண்ட செய்தியைக் கேட்கவே அம்மாளுக்கு நிரம் பவும் விசனமாக இருந்தது.
பக்கம்:பூர்ண சந்திரோதயம்-2.pdf/195
Jump to navigation
Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை
