பக்கம்:பூர்ண சந்திரோதயம்-2.pdf/198

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

186 பூர்ணசந்திரோதயம்-2 அழகிலும் புத்திசாலித்தனத்திலும் உன்னை மீறியவர்கள் கிடைப்பது அருமையாதலால் இளவரசர் உன்னிடத்தில் நீடித்த காதலையும் பிரேமையையும் வைத்திருப்பார் என்பது நிச்சயமானது. ஆனாலும், இன்னம் கொஞ்ச காலத்தில் அவருடைய புத்தி எப்படி மாறுமோ? தாலிகட்டின பட்டமகிஷிக்கும், சேர்க்கையாக வந்த வைப்பாட்டிக்கும் பேதம் உண்டல்லவா? அவருக்குப் பிரியம் இருக்கும் வரையில்தான் வைப்பாட்டிக்குச் செல்வாக்கும் மேன்மையும் இருக்கும். அவருக்கு இஷ்டமில்லாவிட்டால், எல்லாம் ஒரு நிமிஷத்தில் தரைமட்டமாகிவிடும். ஆகையால், நாம் இது வரையில் செய்தது ஒரு பெரிய காரியமல்ல. இனிமேல் செய்ய வேண்டிய காரியம்தான் மகா அரிதான காரியம். அதை உன்னிடம் சொல்லாமல் நானும் அம்மாளுமாக இதுவரையில் யோசனை செய்து ஒருவித முடிவுக்கு வந்து அதைக்குறித்து ரகசியமான சில முயற்சிகள் செய்திருக்கிறோம். ஆனால், அதில் உனக்கு எவ்விதப் பிரயாசையும் இல்லை. வேறே சில மனிதர்களால் அந்தக் காரியம் ஆக வேண்டும். அவர்களுக்குக் கொடுப்பதற்காகவே அம்மாள் புதன்கிழமையன்று மருங்காபுரிக் கிழவனிடம் போய் மூவாயிரம் ரூபாய் வாங்கிக் கொண்டு வந்தாள். ஆனால், அவர்கள் அந்தக் காரியத்தை முடித்து வைத்தவுடனே, நாம் அவர்களுக்கு ஒரு பெரிய சன்மானம் செய்ய வேண்டும். அந்தச் சன்மானம் சாதாரணமாக நம்மைப் போன்றவர்களால் செய்யக்கூடியதல்ல. அது மகா ராஜாக்கள் பார்த்துச் செய்யக்கூடிய சன்மானம். நீ இளவரசரைத் தூண்டி அந்தச் சன்மானத்தைச் செய்து வைக்க வேண்டும். அதெல்லாம் பிந்தி நடக்கவேண்டிய காரியமாதலால், அதைப்பற்றி நாம் இப்போது கவலைப்பட வேண்டியதில்லை" எனறான. அதைக் கேட்டபூர்ணசந்திரோதயம் ஒருவாறு வியப்படைந்து, 'ஒகோ அப்படியானால், நீங்களும் அம்மாளும் சேர்ந்து