பக்கம்:பூர்ண சந்திரோதயம்-2.pdf/200

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


188 பூர்ணசந்திரோதயம்-2 இளவரசருக்கு உண்மையான பிரியமே கிடையாது. அவள் இவரைக்கலியாணம் செய்துகொண்டபிறகு ஒருநாள் கூட இவர் அவளுடைய அந்தப்புரத்துக்குப்போய் அவளுடைய முகத்தைப் பார்த்தறியார். இவருடைய பிரியத்தைச் சம்பாதித்துக் கொள்ள வேண்டுமென்று, அவள் எவ்வளவோ முயற்சிகள் செய்தும், அழுதும், பட்டினி கிடந்தும் பார்த்ததெல்லாம் பயனற்றுப் போய் விட்டது. இந்த இளவரசருடைய தாயாரான பெரிய ராணிக்கு மாத்திரம் இவருடைய பட்டமகிஷியினிடத்தில் அன்பும் இரக்கமும் இருந்துவந்தன. பெரிய ராணி தம்முடைய புத்திரனுக்கு எவ்வளவோ நற்புத்தி புகட்டியும், வேண்டியும் பார்த்தாள். இளவரசர் அதற்குச் செவிகொடுக்கவில்லை. அப்படி இருந்த சமயத்தில், இளவரசருடைய பட்டமகிஷியின் தகப்பனாரான பூனாதேசத்து மகாராஜன் நோயடைந்து படுத்திருப்பதாகவும் பெரிய அரசரிடத்திலும் அனுமதி பெற்றுக் கொண்டு பூனாவுக்குப் போனாள். அவள் போய் சுமார் மூன்று மாச காலமாகிறது. அவளுடைய தகப்பனார் இன்னமும் படுத்த படுக்கையாகவே இருக்கிறாராம். அவர் எப்பொழுது குணமடைவார் என்பது தெரியவில்லையாம். அந்த நிலைமையில் அவரை விட்டுவர அந்தப் பட்டம கிஷிக்கு மனமில்லை. ஆகையால், இன்னம் இரண்டு மூன்று மாசகாலம் அங்கிருந்துவிட்டு வருவதாக அவள் நம்முடைய பெரிய ராணிக்கு எழுதியிருக்கிறாள். அதோடு, அவள் இன்னொரு விஷயமும் எழுதியிருக்கிறாள். அந்த ஊரில் அவளுடைய மனசுக்கு உகந்தபடி நடந்துகொள்ளக்கூடிய தாதிமார்கள் இல்லையாம். ஆகையால் நல்லவர்களாகப் பார்த்து நான்கு தாதிகளை அனுப்பி வைத்தால், தான் திரும்பித் தஞ்சைக்கு வரும்போது அவர்களையும் கூடவே அழைத்துக்கொண்டு வர செளகரியமாக இருக்கும் என்று எழுதியிருக்கிறாள். இந்த ஊர்ப் பெரிய ராணிக்கு நம்முடைய அம்மாளிடத்தில் நிரம்பவும் அபிமானம் உண்டு என்பது எனக்குத் தெரிந்த விஷயம். சில தினங்களுக்குமுன் அம்மாள் பெரிய ராணியைப்