பக்கம்:பூர்ண சந்திரோதயம்-2.pdf/201

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


வடுவூர் கே. துரைசாமி ஐயங்கார் 189 பார்க்கப் போயிருந்தகாலத்தில் அவள் அந்தக் கடிதத்தின் விஷயத்தை அம்மாளிடம் சொல்லி, நல்லவர்களாகப் பார்த்து நான்கு தாதிப் பெண்கள் சம்பாதித்துக் கொடுக்கும்படி கேட்டுக் கொண்டார்களாம். அம்மாள் அப்படியே செய்வதாக ஒப்புக் கொண்டு வந்திருக்கிறார்கள். நமக்கு அனுகூலமானவர்களாகப் பார்த்து நான்கு பெண்களைப் பொறுக்கி அனுப்பி வைக்க வேண்டும் என்றும், அந்தப் பெண்கள் பூனா தேசத்திலுள்ள நம் இளவரசருடைய பட்டமகிஷியிடம் போய், மகா யோக்கியர்கள் போல நடந்துகொண்டே இருந்து, கடைசியில் அந்தப் பட்ட மகிஷிக்கு விபசாரதோஷம் கற்பிக்கத் தகுந்த சில ஏற்பாடுகளை மிகவும் தந்திரமாகச் செய்ய வேண்டும் என்றும் நாங்கள் ஏற்பாடு செய்திருக்கிறோம். தம்முடைய பட்டமகிஷி விபசார தோஷமுடையவள் என்பது இளவரசருக்குத் தெரியும் படியும் நாம் சூழ்ச்சி செய்ய வேண்டும். அப்படிச் செய்தால், அவர் உடனே தம்முடைய பட்டமகிஷியை வேண்டாம் என்று விலக்கிவிடுவதோடு, வேறொரு பெண்ணை உடனே கலியாணம் செய்துகொண்டு அவளைப் பட்டமகிஷியாக ஆக்குவார் என்பது நிச்சயம். அந்தப் பட்டமகிஷி ஸ்தானத்தில் உன்னைவைக்க வேண்டும் என்பது அம்மாளுடைய தீர்மானம், ஆகையால், நீ இப்போது இளவரசருடைய கருத்துக்கு இணங்கி, அவருடைய அரண்மனைக்குப் போப் ஏழாவது உப்பரிகையிலிருந்து கொண்டு அவரிடத்தில் அன்னியோன்னியமாக இருந்துவந்தாலும், உனக்கும் அவருக்கும் தேக சம்பந்தம் உண்டு என்பது எவருக்கும் தெரியவே கூடாது. நீ அந்த விஷயத்தில் அவ்வளவு திறமையாகவும் ஜாக்கிரதையாகவும் நடந்து கொள்ள வேண்டும். நீ தார்வார் தேசத்து மகாராஜனுடைய அபிமான புத்திரி என்றும், இந்த தேசத்து மகா ராஜாவுக்கு சொந்தக்காரி ஆதலால், ஏதோ ஒரு காரியார்த்தமாக இந்த அரண்மனைக்கு வந்திருப்பதாகவும், நீ கடைசிவரையில் சொல்லிக்கொண்டிரு. அப்படிச் செய்தால் தான், உன்னை இவர் கடைசியில்