பக்கம்:பூர்ண சந்திரோதயம்-2.pdf/205

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


வடுவூர் கே. துரைசாமி ஐயங்கார் t 193 பூர்ணசந்திரோதயம், அதைச் சொல்லவும் வேண்டுமா? என் மூலமாக எந்தச் சங்கதியாவது வெளியாகி விடுமோ என்ற கவலையே உங்களுக்குக் கொஞ்சமும் வேண்டாம். என்னை மகோன்னத பதவியில் வைப்பதற்காக நீங்கள் எல்லோரும் இவ்வளவு பாடுபடுகிறீர்கள். அப்படி இருக்க, அதை நானே வெளியிட்டுக் கெடுத்துக் கொள்வதென்றால், என்னைவிடப் பொறுக்கியெடுத்த முட்டாள் யார் இருப்பார்கள்?' என்றாள். ،معصم * * ... * சாமளராவ் மகிழ்ச்சியாகப் புன்னகை செய்து சரி; நேரமாகிறது. நீ இளவரசருக்கு அனுப்பவேண்டிய கடிதத்தை எழுது. அதை நானும் பார்த்துவிட்டுப் போகிறேன். உன்னுடைய கடிதம் இளவரசரிடத்திற்கு வந்து சேரும்போது, நான் தற்செயலாக இருப்பவன்போல, அவரோடு கூட அங்கே இருந்து ஒரு வேலை செய்ய வேண்டும்' என்றான். அதைக்கேட்டபூர்ணசந்திரோதயம் உடனே எழுந்து காகிதம், மை, எழுதுகோல் முதலிய கருவிகளில் இருந்து ஒரு மேஜைக்குப்போய் அதன் பக்கத்தில் இருந்த நாற்காலியின் மேல் உட்கார்ந்து இளவரசருக்குக் கடிதம் எழுதத் துவக்கினாள். 20-வது அதிகாரம் ஹேமாபாயி - தூதுக்கிழவி ஹேமாபாயி என்பவள் நாற்பத்தைந்து வயதுக்கு மேல் அடைந்தவள். அவளது உடம்பு கொழுகொழுப்பாகவும், அழகாகவும் இருந்தது. அவள்தனது ஏராளமான ஆபரணங்களை வாரி உச்சி முதல் உள்ளங்கால் வரையில் அணிந்து கொண்டிருந்தது அன்றி, மகா ஆடம்பரமான ஜரிகைச் சேலை, ரவிக்கை முதலியவைகளைத் தரித்திருந்தாள். அவள் தாசியின்