பக்கம்:பூர்ண சந்திரோதயம்-2.pdf/206

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


194 - பூர்ணசந்திரோதயம்-2 வகுப்பைச் சேர்ந்தவள். ராணி வாய்க்கால் சந்து என்ற பெயர் கொண்ட சிறிய தெருவில் அவளுக்கு மூன்று உப்பரிகைகள் உள்ள ஒரு மாளிகை இருந்தது. அவள் இளம் பிராயத்தில், எப்பேர்ப்பட்டவரது மனதையும் ஒரு நொடியில் கவரத்தக்க அற்புதமான அழகோடு இருந்தாள். அந்த ஊரிலுள்ள ஏராளமான பெரிய மனிதர்கள் அவளிடத்தில் நட்பாக இருந்து தங்களது பெருஞ் செல்வத்தை அவளுக்குக் கொடுத்து வந்திருக்கிறார்கள். அப்படி அவளிடம் நட்பாக இருந்தவர் களுள், நமது மருங்காபுரிக் கிழவர் முக்கியமான மனிதர். அவள் வயதடைந்து கிழவியான பிறகு தனது வருமானம் குறைந்து போனதைக் கண்டு, கண்ணியமான குடும்பங்களில் உள்ள யெளவனச் சிறுமிகளை மயக்கி அழைத்துவந்து தனது மாளிகையில் வைத்துக் கொண்டு, தனக்குப்பதிலாக, அவர்களை அந்தத் துறையில் விடுவித்து வந்தாள். அவள் எப்போதும் சிரித்த முகமும், கனிந்த பார்வையும், மாதுரியமான சொற்களும் உடையவளாகவே காணப்படுவதால், எப்படிப் பட்டவர்களும் எளிதில் மயங்கி அவளது வஞ்சக வலையில் வீழ்ந்து விடுவார்கள். ஆனால், அவள் தன் வசம் அகப்பட்டுக் கொண்ட மனிதர்கள் ஒட்டாண்டியாகிற வரையில் கொள்ளை அடித்துக்கொண்டே விடுவாள். அப்படிப்பட்ட பேராசைக் காரிகள் நூறுபேர் சேர்ந்து அபகரித்தால் கூடக் குறையாத செல்வம் மருங்காபுரிக் கிழவரிடம் குவிந்து கிடந்தது. ஆகையால், அவரது நட்பு அவளுக்குச் சாசுவதமாக இருந்து வந்தது. முன்னே விவரிக்கப்பட்டபடிதமது வெல்வெட்டு மாடத்தில் இருந்த மருங்காபுரி ஜெமீந்தாருக்கு முன்னால் ஹேமாபாயி சிரித்த முகத்தோடு வந்து அவரை வணங்கிக் கும்பிடுபோட்டு நிற்க, அவளைக் கண்டு அளவற்ற மகிழ்ச்சியும், புன்னகையும் கொண்ட கிழவர், 'ஹேமாபாயி உட்கார்ந்துகொள். ஓர் அவசரமான காரியமாக நான் உன்னை வரவழைத்திருக்கிறேன்.