பக்கம்:பூர்ண சந்திரோதயம்-2.pdf/207

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


வடுவூர்கே.துரைசாமி ஐயங்கார் - $ 195 நீ எனக்கு இப்படிப்பட்ட உதவி செய்து நிரம்பகாலம் ஆகிறது. இதுவரையில் நீ எனக்காக எத்தனையோ முயற்சிகள் செய்து ஜெயம்பெறச் செய்திருக்கிறாய். அதெல்லாம் அவ்வளவு பெரிதல்ல. இந்தக் காரியத்தை நீ முடித்துக் கொடுப்பாயானால், அப்போதுதான் நீ உண்மையில் கெட்டிக்காரி; என்னிடம் நீ இதுவரையில் பெற்றுள்ள சம்மானத்தை எல்லாம் விடப் பெரிதாக இந்தத் தடவை பெறுவாய்; என்ன சொல்லுகிறாய்? இந்தக் காரியத்தை முடித்துக் கொடுக்க, உனக்கு அவகாசமும் இஷ்டமும் இருக்குமா? சொல்; பார்ப்போம்” என்றார்.

உடனே ஹேமாபாயி இனிமையாகச் சிரித்து, 'நான் எத்தனையோ கடினமான விஷயங்களில் என்னுடைய வல்லமையை எஜமானருக்கு நன்றாகக் காட்டி இருக்கிறேனே! - அப்படி இருக்க, இந்த ஒரு விஷயத்தில் மாத்திரம் எஜமானர் இப்படி சந்தேகப்பட வேண்டிய காரணம் என்ன? எப்படிப்பட்ட காரியமாக இருந்தாலும் யோசிக்காமல் வெளியிடலாம். அதை நான் வெகு சீக்கிரத்தில் முடித்துக் கொடுக்கிறேன். எஜமானருக்கு உபயோகப்படாமல் நான் வேறு என்னதான் செய்யப்போகிறேன்? என்றாள். - மருங்காபுரி ஜெமீந்தார் மிகுந்த களிப்படைந்து, "சரி; அப்படியானால் சொல்லுகிறேன் கேள். இந்த ஊருக்கு நான்கு மைல் தூரத்திலுள்ள மாரியம்மன் கோவில் என்ற ஊரில், செட்டித் தெருவில் ஒரு பங்களாஇருக்கிறதாம். அந்தத் தெருவில் இருப்பது ஒரே ஒரு பங்களாதானாம். அதற்குள் மாசிலாமணிப் பிள்ளை என்ற ஒருவரும், அவருடைய சம்சாரமும் இருக்கிறார்களாம். அந்தப் பெண்ணுக்கு இணையான அழகுடைய பெண்ணே இந்த உலகத்தில் இல்லையென்று எனக்குச் சங்கதி கிடைத்திருக்கிறது. அது மாத்திரமல்ல, அவன் வயதான கிழவனாம். அந்தப் பெண் நல்ல பக்குவகாலத்து குமரியாம். அந்த மாசிலாமணிப்பிள்ளை தன்னுடைய பெண்சாதி பதிவிரதையாக இருக்கவேண்டுமென்ற