பக்கம்:பூர்ண சந்திரோதயம்-2.pdf/208

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


196 பூர்ணசந்திரோதயம்-2 பெளரஷம் உடையவன் அல்லவாம்:ஏதோ ஒரு காரியத்தை உத்தேசித்து அவன் இதற்குமுன் தன் பெண்ஜாதியை ரகசியமாக ஒரு பெரிய மனிதரிடத்திற்கு அனுப்பி வைத்ததாக எனக்கு நிச்சயமான செய்தியும் கிடைத்திருக்கிறது. ஆகையால், அவனுக்கு நாம் ஏராளமான பொருள் கொடுத்தால், அவன் நம் விஷயத்திலும் இணங்கி வரலாம் என்று நினைக்கிறேன். ஆனால், நாம் கொஞ்சம் எச்சரிப்பாகவே நடந்து கொள்ள வேண்டும். அவன் நம்முடைய பணத்தை வாங்கிக் கொண்டு. அவளை அனுப்பிவிட்டு, பிறகு நம் மீது நஷ்டத்துக்கு தாவா செய்தாலும் செய்வான். அப்படிப்பட்ட அவமானத்துக்கு இடம் கொடுக்காமல் நாம் நிரம்பவும் ஜாக்கிரதையாக நடந்து கொள்ள வேண்டும்' என்றார். ஹேமாபாயி:- ஒ! அப்படியே செய்வோம். எஜமானருடைய பெயரையே வெளியிடாமல், நான் இந்தக் காரியத்தை எளிதில் முடித்துத் தருகிறேன். அவள் வருவதாக ஒப்புக் கொண்டால், அவளை நான் என்னுடைய ஜாகைக்கே அழைத்து வந்து மூன்றாவது உப்பரிகையில் வசதியாக வைக்கிறேன். எஜமானர் அவளை அவ்விடத்திலேயே வந்து பார்த்தால், எஜமானர் யார் என்பதை அவள் அறிந்து கொள்ள வழி இல்லாமல் போகும். இதற்குமுன் அவள் எஜமானரைப் பார்த்திருந்தாலன்றி மற்றப்படி அவள் எப்படித் தெரிந்து கொள்ளப் போகிறாள்? ஜெமீந்தார்:- நான் இன்னார் என்பதை அவள் இதற்குமுன் தெரிந்துகொண்டிருப்பாளென்று நான் நினைக்கவில்லை. மாசிலாமணிப்பிள்ளை என்ற பெயருள்ள எந்த மனிதனோடும் நான் பழகியதில்லை. என் மனசில் ஒரு சந்தேகம் உண்டாகிறது. அந்த மனிதனுடைய உண்மைப் பெயர் மாசிலாமணிப் பிள்ளையாக இருக்காது என்று என் மனசில் ஒர் எண்ணமும் உண்டாகிறது. அவர்கள் யாராக இருந்தாலும் இருக்கட்டும். அவளை நாம் கொண்டுவந்து தான் தீரவேண்டும். அதனால்,