வடுவூர் கே. துரைசாமி ஐயங்கார் 197
அவமானம், அல்லது, துன்பம் வரக்கூடியதாக இருந்தாலும் பரவாயில்லை. நான் யார் என்பது முக்கியமாக அவளுடைய புருஷனுக்குத் தெரியாதிருப்பதுதான் அவசியமானது. அவளுக்கு மாத்திரம் தெரிந்தால், அதனால் அவ்வளவாகக் கெடுதல் உண்டாகாது என்று நினைக்கிறேன். அவளை அடைய ஆசைப்படுகிற மனிதர் ஒரு ஜெமீந்தார் என்பதையே நீ வெளியிட வேண்டாம். -
ஹேமாபாயி:- ஆம்; அப்படித்தான் செய்ய வேண்டும். அவன் எந்த நியாய ஸ்தலத்துக்குத்தான் போகட்டுமே. இந்த ஹேமாபாயி மனசு வைப்பாளானால், திரிமூர்த்திகள் வந்தாலும், இவளுடைய வாயிலிருந்து உண்மையில் ஒரு வார்த்தைகூடகிரகிக்க முடியாது என்பதை எஜமானர் நிச்சயமாக வைத்துக் கொள்ளலாம். எனக்கொன்றும் தெரியாது என்று ஆயிரம் பிரமாணம் வேண்டுமானாலும் செய்து துணிபோட்டுத் தாண்டி விடுவேன். சத்தியமாவது பிரமாணமாவது. அதைப் பற்றி எல்லாம் நான் கொஞ்சமும் கவனிக்கிறவளே அல்ல.
ஜெமீந்தார்:- (மகிழ்ச்சியடைந்து புன்னகை செய்து) ஆம்: நிஜந்தான். இப்படிப்பட்ட ஸ்திரீ விஷயங்களில் சத்தியமும் நியாயமும் பார்த்தால், மனிதன் ஒரே ஸ்திரீக்கு மேல் அதிகமான ஸ்திரீகளுடைய முகத்தைக் கூட பார்க்க வழியில்லாமல் போப் விடும். ஆகையால், நீ சொல்வது சரியான பேச்சு. அது போகட்டும். பண விஷயத்தைப் பற்றி நீ கொஞ்சமும் யோசிக்கவாவது, பின்வாங்கவாவது வேண்டாம். அவர்க ளுடைய புருஷன் இதற்கு இணங்கினால், அவனுக்கு இரண்டாயிரம் ரூபாய் வேண்டுமானாலும் கொடுத்து விடலாம். ஆனால், முழுத்தொகையையும் நாம் முன்னால் கொடுக்கக் கூடாது. நாம் அனுப்பும் பெட்டிவண்டியில் அவன் தன்னுடைய சம்சாரத்தைக் கொண்டு வந்து ஏற்றிவிடும்போது பாதித் தொகையைக் கொடுத்துவிடு. இன்னொரு பாதித் தொகையை அந்தப் பெண் உன்னுடைய ஜாகைக்கு
பக்கம்:பூர்ண சந்திரோதயம்-2.pdf/209
Jump to navigation
Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை
