பக்கம்:பூர்ண சந்திரோதயம்-2.pdf/214

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

200 - பூர்ணசந்திரோதயம்-2 தோட்டக்காரன் அப்படியே செய்வதாகச் சொல்லி விட்டு விரைவாக உள்ளே ஒடி விஷயத்தைத் தெரிவிக்க, மாசிலாமணிப் பிள்ளை என்பவர் உடனே வெளியில் வந்தார். அவர் துரத்தில் வரும்போதே, ஹேமாபாயி அவரது முகத்தை உற்றுநோக்கி ஆராய்ச்சி செய்தாள். ஏனென்றால், அவள் செய்து வந்த தொழில் நிரம் பவும் தந்திரமாகவும் சாமர்த்தியமாகவும் நடத்தப்பட வேண்டியது. ஆகையால், எதிராளியின் முகக்குறியிலிருந்து அவனது குனா குணங்களை நன்றாக அறிந்துகொண்டு அதன் பிறகே, விஷயத்தை வெளியிடுவது வழக்கம். அவ்வாறு பழகிப் பழகி மனிதரது முகக்குறிகளை ஆராய்ந்து அறிவதில் அவள் அதிகத் தேர்ச்சி பெற்றிருந்தாள். ஆகையால், அவள் மாசிலாமணிப் பிள்ளையின் முகக் குறிகளிலிருந்து, அவர் எல்லா விஷயத்திற்கும் துணிந்த அயோக்கிய சிகாமணி என்று ஒருவாறு யூகித்துக் கொண்டாள். அதோடு அந்த மனிதரது முகம் அவள் அதற் குமுன் பார்த்துப் பழகிய முகமாகவும் தோன்றியது. அவரைத் தான் எங்கே எப்போது பார்த்திருக்கக் கூடுமென்று அவள் தனக்குள் சிந்தனை செய்தவண்ணம் நின்றாள். அவளண்டை நெருங்கிவந்த மாசிலாமணிப்பிள்ளை என்பவருக்கும் அவளைக் கண்டு ஒருவித வியப்பும் இன்பமும் அடைந்தவர் போலக் காணப்பட்டது. அன்றி, அவளை, நோக்கிக் தயங்கித் தயங்கிப் பேசத் தொடங்கி, 'ஏனம்மா வாசலில் நிற்கிறீர்களே! இப்படி உள்ளே வருகிறதுதானே! உங்களை நான் இதற்குமுன் எங்கேயோ பார்த்திருப்பதாக ஒரு நினைவு உண்டாகிறது. எங்கே பார்த்திருக்கலாம்?' என்ற வண்ணம் அவளை உபசரித்து உள்ளே அழைத்துக் கொண்டுபோனார். அவரைத் தொடர்ந்து பின்னாக நடந்து வந்த ஹேமாபாயி, "நானும் உங்களை எங்கேயோபார்த்த மாதிரிதான் இருக்கிறது. ஆனால், சரியானபடி நினைவு உண்டாக