பக்கம்:பூர்ண சந்திரோதயம்-2.pdf/215

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வடுவூர் கே. துரைசாமி ஐயங்கார் 201 - நாட்டேன் என்கிறது. மாசிலாமணிப் பிள்ளையென்று பெயர் கொண்ட என்னுடைய சிநேகிதர் ஒருவர் இருக்கிறார். நான் இந்தத் தெருவின் வழியாகப் போனபோது, இந்த பங்களாவைக் கண்டு இது யாருடையது என்று விசாரித்தேன். மாசிலாமணிப் பிள்ளையினுடையது என்று சொன்னார்கள். ஒருவேளை என்னுடைய சிநேகிதர்கள் இங்கே ஜாகை வைத்துக் கொண்டிருக்கிறாரோஎன்று சந்தேகித்து, அவரைப் பார்க்கலாம் என்று வந்து உங்களுக்கு அநாவசியமான தொந்தரவு கொடுத்துவிட்டேன்' என்று நேர்த்தியாகவும் தேன்போல இனிமையாகவும் மொழிந்தாள். அதற்குள் அவர்கள் இருவரும் கட்டிடத்தை அடைந்து, முதலில் காணப்பட்ட ஒரு கூடத்தை அடைந்தனர். மாசிலாமணிப் பிள்ளை பக்கத்தில் இருந்த ஒரு விசிப் பலகையின் மேல் உட்கார்ந்து கொள்ளும்படி அவளை உபசரித்த வண்ணம், தாம் வேறோர் ஆசனத்தில் அமர்ந்தார். ஹேமாபாயி ஒருவிதத் துணிவடைந்தவளாய் அவரால் காட்டப்பட்ட விசிப் பலகையின் மேல் உட்கார்ந்து கொண்டாள். - உடனே மாசிலாமணிப் பிள்ளை அவளது முகத்தைத் திரும்ப ஒருமுறை கூர்ந்து நோக்கி, அப்போதே உண்மையைக் கண்டுகொண்டவர்போலக் காட்டி, "ஒகோ சரி சரி; இப்போதுதான் நினைவு உண்டாகிறது. தஞ்சாவூர் ராணி வாய்க்கால் சந்தில் இருக்கும் ஹேமாபாயியல்லவா நீ?" என்று சந்தேகமாகவும் மகிழ்ச்சியாகவும் கூறினார். அதைக் கேட்ட ஹேமாபாயி உண்மையிலேயே அளவுகடந்த மகிழ்ச்சி அடைந்தாள். தான் அவரிடம் பேசவேண்டிய விஷயம் அசாதாரணமான விஷயம். ஆகையால், அதற்குமுன் முகம் அறியாத மனிதரிடத்தில் தான் துணிந்து தனது கருத்தை எப்படி வெளியிடுவதென்று அவள் அஞ்சி வந்ததற்கு அநுகூலமாக, அவர் தன்னை முன்னரே அறிந்தவராக இருக்கிறார் என்ற விஷயம் அவளது மனதில் உற்சாகத்தையும் நம்பிக்கையையும்