பக்கம்:பூர்ண சந்திரோதயம்-2.pdf/216

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

202 பூர்ணசந்திரோதயம்-2 துணிவையும் உண்டாக்கியது. தனது காரியம் சுலபத்தில் பலித்து விடும் என்ற ஒரு நிச்சயமும் ஏற்பட்டது. அவள் உடனே புன்னகை செய்து, 'ஒகோ! அப்படியா கடைசியில் நான் உங்களுக்குத் தெரிந்தவளாகவே இருக்கிறேன். நான் ஏதோ தவறாக நினைத்து இங்கே வந்துவிட்டதாக எண்ணினேன். இனி நான் விசனப்பட வேண்டிய அவசியமே இல்லை. உங்களை இதற்கு முன் நான் எப்போது பார்த்தேன் என்பது எனக்கு ஞாபகம் உண்டாகவில்லையே! நீங்கள் என்னை எப்போது பார்த்தீர்கள்? நீங்கள் என்னுடைய ஜாகைக்கு எப்போதாவது வந்திருக்கிறீர்களா?' என்றாள். மாசிலாமணிப்பிள்ளை, 'இப்போது சமீபகாலத்தில் நான் உன்னுடைய ஜாக்ைகு வந்ததில்லை. நாலைந்து வருஷங்களுக்கு முன், நான் அடிக்கடி உன்னுடைய ஜாகைக்கு வந்து சந்தோஷமாக இருந்துவிட்டுப் போவது வழக்கம். ஆனால், நான் வந்தால் என்னுடைய பெயரையும் சொல்வதில்லை; அவ்வளவு பகிரங்கமாகவும் வருவதில்லை. இராக்காலத்தில் ரகசியமாக வந்து ரகசியமாகப் போய் விடுவேன். அதனால்தான், இப்போது உன்னைப் பார்த்தவுடனே எனக்கே அடையாளம் தெரியவில்லை என்றார். - உடனே ஹேமாபாயி இனிமையாகப் புன்னகை செய்து, "ஓகோ இருக்கலாம் இருக்கலாம். எனக்குக்கூட இப்போதுதான் ஞாபகம் உண்டாகிறது. நானும் உங்களைப் பார்த்துத்தான் இருக்கிறேன்' என்றாள். மாசிலாமணிப்பிள்ளை:- (வேடிக்கையாகக் கண்ணைச் சிமிட்டிக் கொண்டு) என்ன விசேஷம் rேமந்தானே? உன்னுடைய காலrேபம் பழைய மாதிரியே நடந்து கொண்டு வருகிறதல்லவா? ஹேமாபாயி:- (மகிழ்ச்சியாகப் புன்னகை செய்து) என்னவோ உங்களைப் போன்ற பிரபுக்களுடைய தயவினால்