204 - பூர்ணசந்திரோதயம்-2 என்கிறது. என்ன செய்கிறது! நீ நன்றாகப் பணம் சம்பாதித்துச் சம்பாதித்துப் பழகியிருக்கிறாயே. என்னிடம் இப்போது பணமில்லாமையால், நான் நிரம் பவும் கஷ்டப்பட்டுக் கொண்டிருக்கிறேன். பணம் சம்பாதிக்கிற வழி ஏதாவது உன்னைப் போன்றவர்கள் கற்றுக்கொடுத்தால் இந்தச் சமயத்துக்கு நிரம் பவும் அனுகூலமாக இருக்கும். அதுபோகட்டும். நீ இந்தச் சாயுங்கால வேளையில் இந்த ஊரில் வந்து என்ன செய்து கொண்டிருக்கிறாய்?
ஹேமாபாயி:- (அவரிடம் அந்தரங்க விசுவாசமுள்ளவள் போல நடித்து) நீங்கள் என்னைக் கண்டு பழைய சிநேகிதை என்பதை உணர்ந்து அதை வெளியில் காட்டி அன்பு பாராட்டினர்கள். அப்படியிருக்க, நான் உங்களை அன்னியராக எண்ணி விஷயத்தை மறைப்பது சரியல்ல. நான் ஒரு முக்கியமான விஷயமாக இந்த ஊரில் அலைந்து திரிந்து கொண்டிருக்கிறேன். இதில் மாத்திரம் நான் ஜெயமடைவேன் ஆனால், எனக்கும் இருநூறு முன்னூறு கிடைக்கும். நான் அழைத்துக் கொண்டு போகும் பெண்ணும் ஒரு ராத்திரியில் இரண்டாயிரம் ரூபாய் வரையில் சம்பாதித்துக் கொள்ளலாம். அப்படிப்பட்ட அதிர்ஷ்டம் எவளுக்கு வாய்க்கக் காத்திருக்கிறதோ தெரியவில்லை.
மாசிலாமணிப் பிள்ளை:-(வியப்பும், மகிழ்ச்சியும் சுவாரஸ்யமும் அடைந்து) அது என்ன விஷயம்? அதை நன்றாக உடைத்துத்தான் சொல்லேன். மூடிமூடிப் பேசுகிறாயே.
ஹேமாபாயி:- (தணிவாகவும் ரகசியமாகவும் பேசத் தொடங்கி) அந்தச் சங்கதி நிரம் பவும் வேடிக்கையானது. ஆனால், அது புதுமையானதல்ல. அதைப்போல எத்தனையோ தடவை களில் நடத்தியிருக்கிறேன் வேறொன்றுமில்லை. என்னை ஆதரித்து வரும் பிரபுக்களில் எல்லாம் முக்கியமானவர் ஒரு கிழவர். அவர் உங்களை விட வயசில் மூத்தவராக இருப்பார். அவ்வளவு வயசானாலும், அவருக்கு இந்த
பக்கம்:பூர்ண சந்திரோதயம்-2.pdf/218
Jump to navigation
Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை
