பக்கம்:பூர்ண சந்திரோதயம்-2.pdf/219

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வடுவூர் கே. துரைசாமி ஐயங்கார் 205 விஷயத்தில் இருக்கும் பைத்தியம் இவ்வளவு அவ்வளவல்ல. அவர் இன்று காலையில் என்ஜாகைக்கு வந்து என்னோடு பேசிக் கொண்டிருந்தார். இதுவரையில் அவர் பார்த்துப் பழகிய பெண்கள் எல்லாம் அவருக்குப் பிடிக்கவில்லையாம். அவர்களுடைய அழகெல்லாம் முதல்தரமானது அல்லவாம். என் வீட்டுக்கு வருவதற்கே அவருக்கு வெறுப்பு உண்டாகி விட்டதாம். ஆனால், அவருக்கு அவ்வளவு வயசாகி இருந்தாலும், பார்வைக்கு அவர் அழகாகத்தான் இருக்கிறார். அவரிடத்திலுள்ள பணம் நம்முடைய தேசத்து ராஜாவினிடத்தில் கூட இருக்காது. - மாசிலாமணிப்பிள்ளை:- (புரளியாகப் பேசத் தொடங்கி) அதற்காக அவர் உன்னை என்ன செய்யச் சொல்லுகிறார்? இது வரையில் அவர் பார்த்த பெண்களை எல்லாம் விட அதிக அழகான ஒருத்தியைக் கொண்டுவந்தால்தான், தம்முடைய மோகவிடாய் தணியும் என்று சொல்லி, இந்த ஊரில் தேடிப் பிடிக்கும்படி உன்னை அனுப்பினாரா? ஹேமாபாயி:- (நயமாகச் சிரித்துக்கொண்டு) ஆம் ஆம்; அப்படித்தான். நான்கண்டுபிடிக்கும் பெண் அபூர்வமான அழகு வாய்ந்தவளாக இருக்க வேண்டும். அது மாத்திரமல்ல. அவள் மகா ஸரஸ் குணம் பொருந்தியவளாகவும், அசட்டுத்தனமாகப் பேசாமல் மரியாதையாகவும், புத்திசாலித்தனமாகவும், வேடிக்கையாகவும் பேசித் தன்னுடைய இனிய குணங்களால், அவரை மகிழ்விக்கக் கூடியவளாக இருக்க வேண்டுமாம். இந்த அம்சங்கள் வாய்ந்தவளாக இருக்கிற பெண் எவளாக இருந்தாலும், நான் அவளை அழைத்துக்கொண்டு போனால், அவர் ஏற்றுக்கொள்வார். அப்படிப்பட்ட யோக்கியதை வாய்ந்த ஒரு பெண் இந்த ஊரில் இங்கே ஏதோ ஒரு தெருவில் இருப்பதாகச் சிலர் சொல்லக்கேட்டு நான் இந்த ஊருக்கு வந்து விசாரித்தேன்.அவள் தன் புருஷனோடு இந்த ஊரை விட்டுப் புறப்பட்டு வேறே எங்கேயோ போய்விட்டதாகக் கேள்வி