பக்கம்:பூர்ண சந்திரோதயம்-2.pdf/22

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


18 பூர்ணசந்திரோதயம்-2 அநேகமாக அவள் ஒத்தவளாகவே இருக்கிறாள்' என்றார். உடனே மருங்காபுரி ஜெமீந்தார், தங்களுடைய பிரியப்படியே நடந்துகொள்ளுகிறேன். தாங்கள் நாளைய தினம் எனக்கு அனுப்புவதாகச் சொன்ன மகாராஜாவென்ற பட்டத்தின் சன்னதை அனுப்ப மறந்துபோக வேண்டாம். பூர்ணசந்திரோத யத்தின் விஷயமாக ஏற்பட்ட நஷ்டத்துக்கு இந்த ஒரு லாபமாவது இருக்கட்டும்” என்றார். இளவரசர், "ஓ! அவசியம் இருக்கவேண்டும். மறந்து போகாமல் நான் நாளையதினம் மந்திரியோடு பேசி அதை அனுப்பிவைக்கிறேன். ஆனால், நீங்கள் அந்தப் பார்சீஜாதிப் பெண்ணை அடைந்தபிறகு நமக்கு முக்கியமாகத் தெரிய வேண்டிய சங்கதிகளை அவளிடம் கேட்டறிந்து எனக்குத் தெரிவியுங்கள். அன்றைய தினம் மகாபூடகமாக அவர்கள் நம்மைக் கொண்டுபோய் ஏதோ கடிதத்தில் என்னுடைய கையெழுத்தை வாங்கிக் கொண்டாள். அதன் உண்மை என்ன என்பதைத் தந்திரம்ாகக் கேட்டறிந்து எனக்குத் தெரிவியுங்கள் என்று நயமாகக் கூறினார். மருங்காபுரி ஜெமீந்தார், "ஓ! அவசியம் தெரிவிக்கிறேன். இந்தப் போலீஸ் இன்ஸ்பெக்டர் நிரம்பவும் சாமர்த்தியசாலி. நேற்றைய தினம் அவர் பிச்சைக்காரனைப் போல வேஷம் போட்டுக் கொண்டு ரஸ்தாவில் உட்கார்ந்திருந்த விஷயம் ஏற்கெனவே தங்களுக்குத் தெரியும். அன்றையதினம் நம்மை அவர்கள் எவ்வளவு ரகசியமாகக் கொண்டுபோய் வேலையை முடித்துக்கொண்டார்களோ, அதுபோலவே, நேற்றையதினம் அவர்கள் அந்த தினசரி டைரியைக் கொண்டுவந்து சேர்த்திருக்கிறார்கள். இருந்தாலும், அந்தப் போலீஸ் இன்ஸ்பெக்டர் இந்த விஷயத்தில் பற்பல தந்திரங்களைச் செய்து நிரம்பவும் பாடுபட்டு நாளைய சாயுங்காலத்துக்குள் அவளுடையவிவரங்களையெல்லாம் கண்டுபிடித்துவிடுவதாக வாக்குறுதி செய்துவிட்டுப் போயிருக்கிறார். அவர் இந்த