பக்கம்:பூர்ண சந்திரோதயம்-2.pdf/221

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வடுவூர் கே.துரைசாமி ஐயங்கார் 207 இருக்கலாம். அப்பேர்ப்பட்ட பைத்தியக்காரர்கள். எத்தனையோ பேர் உலகத்தில் இருக்கிறார்கள்தான். (சிறிது யோசனை செய்து) எனக்கு ஒரு விஷயம் ஞாபகம் உண்டாகிறது. எனக்குத் தெரிந்த பெண் ஒருத்தி இந்த ஊரில் இருக்கிறாள். நீ விவரித்த யோக்கியதா பட்சமெல்லாம் அவளிடம் பூர்த்தியாக நிரம்பி இருக்கின்றன. அந்த மனிதர் இரண்டாயிரம் ரூபாய் கொடுப்பது உண்மையானால், அவள் ஒருவேளை இசைந்தாலும் இசையலாம் என்று நினைக்கிறேன். ஹேமாபாயி:- (மிகுந்த களிப்பும் உற்சாகமும் அடைந்தவளாய்) ஆகா! அப்படியா நிரம்ப சந்தோஷம் பருத்தி துணியாகவே காய்த்தது போலாயிற்று. நீங்கள் மாத்திரம் என் பேரில் தயை வைத்து அந்தப் பெண்ணை நான் அடையக் கூடிய மார்க்கத்தைக் காட்டுவீர்களானால், அந்த அபாரமான உதவியை நான் ஒருநாளும் மறக்கவே மாட்டேன். இந்த விஷயம் கொஞ்சமும் வெளியாகாமல், பரம ரகசியமாகவே நான் மற்ற எல்லாக் காரியங்களையும் முடிக்கிறேன். மாசிலாமணிப் பிள்ளை:- (தணிவான குரலில் பேசத் தொடங்கி) அதெல்லாம் சரிதான். பணம் எப்போது கொடுக்கிறது? அது முதலில் வந்தால்தானே பெண்ணுக்கு நம்பிக்கையும் சந்தோஷமும் உண்டாகும். ஹேமாடாயி:- பணத்தைப் பற்றிய கவலையே தேவையில்லை. அந்த விஷயத்தில் அவ்விடத்து அபிப்பிராயம் எப்படியோ அப்படியே மிகவும் லலிதமாகக் காரியத்தை முடித்துக் கொள்ளலாம். அந்தப் பெண் மாத்திரம் வருவதாக ஒப்புக் கொண்டு வருவாளானால், அவளை அழைத்துக் கொண்டு போக நானே நேரில் ஒரு பெட்டி வண்டியோடு வந்து சேருகிறேன். பாதித் தொகையை நான் என்னுடைய உத்தர வாதத்தின் மேல் அப்போதே கொடுத்துவிட்டுப் பெண்ணை அழைத்துக் கொண்டு போகிறேன். அவள் என்னுடைய g.8.H-14