பக்கம்:பூர்ண சந்திரோதயம்-2.pdf/222

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


208 பூர்ணசந்திரோதயம்-2 ஜாகைக்கு வந்தவுடன், என்னுடைய உப்பரிகையில் வந்து ஆயத்தமாக இருக்கப் போகிற அந்தப் பிரபுவுக்கும் அவளுக்கும் நான் உடனே சந்திப்புச்செய்து வைக்கிறேன். அப்போது அவரே நேரில், மிகுதித் தொகையையும் கொடுத்துவிட்டு அவளோடு ப்ேசுவார். இந்த ஏற்பாடு நல்லதுதானே? இந்தமாதிரி செய்ய அவளுக்கு இஷ்டம் இருக்குமல்லவா? மாசிலாமணிப்பிள்ளை:- (சிறிது யோசனை செய்து) சரி: இந்த ஏற்பாடு ஒழுங்கானதாகத்தான் இருக்கிறது. அவள் இதை அநேகமாய் ஒப்புக் கொள்ளலாம் என்று நம்புகிறேன். இந்த ஒப்பந்தம் முடிந்த மாதிரியாகவே வைத்துக்கொள். அவளை அழைத்துக் கொண்டுபோக செளகரியமான நாள் எதுவென்று நாம் ஏற்படுத்திக் கொள்ள வேண்டும்.இன்றைக்கு என்ன கிழமை? சனிக்கிழமை அல்லவா? இப்போது சாயுங்கால வேளையாகிவிட்டது. இன்றையதினம் ராத்திரி நான் அவளைப் பார்க்க முடியுமோ முடியாதோ. நாளையதினம் நான் அவளை அவசியம் பார்க்கக் கூடும். அவளுடைய சமயம் பார்த்து நான் அவளிடம் இந்த விஷயத்தை வெளியிட்டு அவளுடைய சம்மதியைப் பெறுகிறேன். நாளைய தினம் ராத்திரி அவள் வரமாட்டாள். திங்கள்கிழமை ராத்திரி எட்டு அல்லது ஒன்பது மணிக்கு அவள் வரத் தயாராக இருப்பாளென்று நான் நிச்சயமாகச் சொல்லக்கூடும். அந்த மனிதருக்கு அது செளகரியமான காலமாக இருக்குமோ என்னவோ அதை நீ அறிந்துகொண்டு சொன்னால், அதற்குத் தகுந்தபடி நடந்து கொள்ளலாம். - ஹேமாபாயி:- அந்தப் பெண் எவ்விடத்தில் இருக்கிறவளோ? அவளை அழைத்துக்கொண்டு போக நான் எவ்விடத்துக்கு வண்டி கொண்டு வருகிறது? அதை முதலில் சொல்லுங்கள். மாசிலாமணிப் பிள்ளை:- உண்மையை உன்னிடத்தில் மறைப் பதில் உபயோகம் ஒன்றுமில்லை. அந்தப் பெண்