வடுவூர் கே.துரைசாமி ஐயங்கார் 211 சிவசிதம் பரம் ! நடராஜா என்ற ஒரு குரல் உண்டாயிற்று. அடுத்த நிமிஷம் ஒரு பரதேசி அவ்விடத்திலிருந்து மெதுவாக வெளிப்பட்டான். அவனது தலைமுகம் முதலிய இடங்களில் எல்லாம் கருப்பான உரோமம் காடுபோல அடர்ந்து உப்புசமாக இருந்தது. தலையில் செம்பட்டை நிறமுள்ள சடைகள் தொங்கிக் கொண்டிருந்தன. அவர் தமது உடம்பு முழுதையும் காஷாய வஸ்திரத்தால் மூடிக் கொண்டிருந்தார்; கழுத்திலும் கைகளிலும் உருத்திராவு மாலைகள் தென்பட்டன. அவரது ஒரு கையில் ஒரு திருவோடும், இன்னொரு கையில் முறுக்கலான கருத்த தடியொன்றும் காணப்பட்டன. அவ்வாறு காணப்பட்ட பரதேசியைக் கண்ட அன்னத்தம்மாள் ஒருவித ஆச்சரியமும் மகிழ்ச்சியும் அடைந்தவளாய் அவரை நோக்கிப் புன்னகை செய்து, 'சுவாமிகளுடைய இருப்பிடம் எதுவோ? தாங்கள் இந்தப் பாழும் மண்டபத்தில்தானா இருக்க வேண்டும். இவ்விடத்தில் ராத்திரியில் பாம்பு முதலிய துஷ்ட ஜெந்துக்கள் வந்து அடையுமே? ஊருக்குள் இருக்கும் சத்திரத்தில் வந்து தங்கக் கூடாதா?’ என்று சந்தேகமாகப் பேசினாள்.
அவளது சொற்களைக் கேட்ட பரதேசி, 'இல்லை அம்மணி எங்களைப்போன்ற உண்மைப் பரதேசிகள் ஊருக்குள் இருப்பது தகாது. நியாயமாக நாங்கள் எல்லோரும் நிர்மாநுஷயமான காடுகளிலேதான் இருக்க வேண்டும். உண்மையில் உலகைத் துறக்காமல் வெளிவேஷம் போடும் பரதேசிகள்தான் ஊருக்குள் கிடந்து கிரகஸ்தர்களுக்குப் பாரமாக இருந்து, சோற்றுக்கும் துணிக்கும் அவர்களை வதைப்பார்கள்' என்றார்.
அதைக்கேட்ட அன்னத்தம்மாள் ஒருவித ஐயங்கொண்டு, 'அப்படியாlசரி; இப்படிப்பட்ட உண்மையான பரதேசியின் தரிசனம் எனக்குக் கிடைத்ததும் ஒர் அரிய பாக்கியம்தான்' என்றாள்.
உடனே பரதேசி, 'நல்லது. நான் உண்மையானபரதேசியோ, அல்லது வேறே யாரோ என்று உங்களுடைய மனசில் ஒரு
பக்கம்:பூர்ண சந்திரோதயம்-2.pdf/225
Jump to navigation
Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை
