பக்கம்:பூர்ண சந்திரோதயம்-2.pdf/226

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


212 பூர்ணசந்திரோதயம்-2 சந்தேகம் உண்டாகி இருப்பதாக என் ஞானதிருஷ்டி எனக்குக் காட்டுகிறது. நீங்கள் யார் என்பதுபோன்ற உங்களுடைய வரலாற்றைச் சொல்லி நான் உண்மையான பரதேசி என்பதை நான் ருஜுப்படுத்துகிறேன். அதற்கு மேலாவது நம்பிக்கைப் படுமல்லவா! நீங்கள் இருப்பது அம்மன்பேட்டை, உங்களுடைய பெயர் அன்னத்தம்மாள் என்பது. இந்த ஊரிலுள்ள எல்லாரையும் விட நீங்கள் அதிக ஆஸ்தியுடைய வர்கள். இன்றையதினம் காலையில் கூட உங்களுக்கு ஒரு கடிதம் வந்தது. அந்தக் கடிதம் தஞ்சையிலுள்ளதுப்பறியும் போலீஸ் இன்ஸ்பெக்டரால் எழுதப்பட்டது. உங்களுக்கு ஒரு பெருத்த அபாயம் நேரப் போகிறது. ஆகையால், நீங்கள் இன்று சாயுங்காலம் இந்த மண்டபத் தண்டை தனியாக வந்தால், அவர் ஒரு மனிதரை அனுப்பி, அந்த அபாயம் இன்னது என்பதை ரகசியமாகத் தெரிவிக்கச் செய்கிறேன் என்று எழுதியிருக்கிறார். அதற்காகவே நீங்கள் இப்போது இங்கே வந்திருக்கிறீர்கள். அவ்வளவு தான் சங்கதி. நான் உண்மையான பரதேசி என்பது இப்போது நிச்சயப்படுகிறது அல்லவா?" என்றார். அவரது சொற்களைக் கேட்டு அளவற்ற ஆச்சரியமும் திகைப்பும் ஐயமும் கொண்ட அன்னத்தம்மாள் சிறிதுநேரம் தயங்கி, 'சரி; சுவாமிகள் சொன்ன வரலாறு எல்லாம் உண்மையானதுதான். ஆனால், சுவாமிகள் உண்மையான பரதேசியாக இருந்தாலும் இருக்கலாம். இன்ஸ்பெக்டரால் அனுப்பப்பட்ட மனிதராக இருந்தாலும் இருக்கலாம். ஏனென்றால், அவரால் அனுப்பப்படும் மனிதனுக்கு ஞான திருஷ்டியின் உதவியில்லாமலேயே இந்த விவரம் எல்லாம் தெரியுமல்லவா?' என்றாள். பரதேசி:- ஆம்; உண்மைதான்; நான் யாராக இருந்தால் என்ன? உங்களுக்கு வேண்டியது, இன்று என்ன அபாயம் நேரப் போகிறது என்ற விவரம்தானே. அதை நானே தெரிவித்து